இதனாலதான் தல அஜீத் எந்த சினிமா நிகழ்ச்சிக்கும் வருவதில்லையா? ரகசியம் இதான்..!

சினிமாக்களில் நடிப்பைத்தாண்டி பட விளம்பரம் என்பது மிக முக்கியமான ஒன்று. பலகோடிகள் செலவழித்து பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படங்கள் கூட சரியான புரோமோஷன்கள் இல்லை என்றால் ஊத்திக்கொள்ளும். அந்தவகையில் உச்ச நட்சத்திரங்கள் முதல் புதுமுகம்வரை தங்களது பட இசை வெளியீட்டு விழா, பட புரோமோஷன் வேலைகள் என அனைத்திலும் கலந்து கொண்டு படத்தை வியாபார ரீதியாக வெற்றி பெற ஒத்துழைப்பர்.

ஆனால் இதில் எதுவுமே சேராமல் தனது ரசிகர்கள் பலத்தையும், கதையை மட்டுமே நம்பி ஷுட்டிங் மற்றும் டப்பிங் பணிகளோடு தனது வேலையை முடித்துக் கொள்பவர் தல அஜீத். அவரின் தனிமை, கூச்ச சுபாபம், போன்றயவையால் தான் அவர் பொது நிகழ்ச்சி மற்றும் திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்ப்பதை தவிர்க்கிறார். நாளடைவில் இதுவே அவரின் கொள்கையாக மாறியுள்ளது.

மேலும் இன்னொரு முக்கிய காரணம்  ரசிகர்களின் அன்பு தொல்லை. சென்னையில் கடந்த 2010-ல் பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்தும் கலந்து கொண்டார். இதனையறிந்த ரசிகர்கள் போட்டி நடைபெறும் இடத்தில் பெரும் திரளாக கூடினர். ஆனால் போட்டி துவங்கும் முன்னரே அஜித்தின் கார் பழுது ஆனதால் அவரால் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. அப்போது, அஜித்தின் கார் பழுது ஆனதால் அவரால் போட்டியில் பங்கு மாட்டார் என்று போட்டி அமைப்பாளர்கள் மைக்கில் அறிவித்தனர். இதனைக் கண்டு தல ரசிகர்கள் ஆவேசமடைந்து பேனர்களை வெறித்தனமாக கிழித்தெறிந்தனர்.

அண்ணனுக்கு ஹிட் கொடுக்க ரெடியான சிறுத்தை சிவா : வெளியான கங்குவா மாஸ் போஸ்டர்

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த சில ஆர்வகோளாறு ரசிகர்கள் பந்தயம் நடைபெறும் ஒடுதளத்தில் அங்கும் இங்குமாய் ஓடினார்கள். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர் போட்டி ஏற்பாட்டாளர்கள். உடனே அஜித்தை தொடர்பு கொண்டனர். பின்னர் அஜித் மைக்கில் ரசிகர்களை அமைதியாக கலைந்துபோக சொன்னார். ஆனால் யாரும் கேட்காததால் பின்னர், வேறு வழி இல்லாமல் வேறு ஒருவரின் காரை எடுத்து இன்னொரு ஒடுதளத்தில் சிறிது தூரம் காரை ஓட்டிய பின்னரே ரசிகர்கள் அமைதியாகி கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த பல வெளிமாநில போட்டியாளர்கள் முகம் சுளித்தனர். மேலும், அஜித்துக்கும் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த ஒரு சம்பவம் காரணமாக அஜீத் அடுத்தடுத்து பொதுவெளியில் நிகழ்ச்சிகளில் தலைகாட்ட மறுத்து வருகிறார்.

Ajith

மேலும் தான் வந்தால் ஆயிரக்கணகான ரசிகர்கள திரளுவார்கள். இதனால் போலீஸ் பந்தோபஸ்து போடவேண்டும். சாலையில் போக்குவரத்து பாதிப்பு அடையும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள். நம்மாலும் நம்முடைய ரசிகர்களாலும் பொதுமக்கள் யாரும் பாதிக்ககூடாது என்ற நல்லெணத்தில்அஜித் குமார் திரைப்பட விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை.

அண்மையில் தனது தந்தை மறைவிற்குக் கூட இது எங்கள் குடும்பம் சார்ந்தது. ஆகவே ரசிகர்கள் வரவேண்டாம் என கேட்டுக்  கொண்டது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews