அண்ணனுக்கு ஹிட் கொடுக்க ரெடியான சிறுத்தை சிவா : வெளியான கங்குவா மாஸ் போஸ்டர்

மாஸ் ஹீரோக்களுக்கு பக்கா கமர்ஷியல் படங்ளை எடுக்க சரியான இயக்குநர் என்றால் அவர் சிறுத்தை சிவாதான். தெலுங்கு சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி பின்னர் தெலுங்கில் சில படங்களை இயக்கினார். அங்கே வெற்றிகளைக் கொடுக்க தமிழில் சிறுத்தை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

முதல்படமே மாஸ் ஹிட் கொடுக்க முன்னணி நடிகர்களின் இயக்குநராக அவதாரம் எடுத்தார் சிவா. சிறுத்தை திரைப்படம் காதல், காமெடி, சென்டிமெண்ட், ஆக்சன் என பல பரிணாமங்களிலும் ஜொலித்தது. ஒரு கமர்ஷியல் படத்திற்கு உண்டான அத்தனை அம்சங்களையும் பெற்று வெற்றி பெற்றது. மேலும் கார்த்தி, தமன்னா, சந்தானம் நடிப்பு படத்திற்கு வலு சேர்த்தது.

ஆனால் சிறுத்தை படத்தில் தெலுங்கு படத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது என்ற விமர்சனமும் இருந்தது. இதனையடுத்து தல அஜீத்தை வைத்து வீரம் படம் எடுக்க படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்தப்படம் இந்தி மற்றும் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. தொடர்ந்து அஜீத்தை வைத்து வேதாளம், விவேகம், விஸ்வாசம் என ஹாட்ரிக் வெற்றி கொடுத்தார்.

இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கினார். அண்ணாத்த படமும் நல்ல வசூலைப் பெற ஹிட் இயக்குநர்கள் லிஸ்ட்டில் இணைந்தார் சிறுத்தை சிவா. இதனையடுத்து தற்போது சூர்யாவை வைத்து கங்குவா என்ற படத்தை இயக்கி வருகிறார். தற்போது இந்தப் படத்தின் ஷுட்டிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி அன்று வெளியான கங்குவா படத்தின் புதிய போஸ்டர் சூர்யா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

கார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு பழக்கமா? பாவம் சார் யூனிட் இனிமே இப்படி செய்யாதீங்க..!

இந்தப் போஸ்டரில் சூர்யா அரசன் போன்று தோற்றமளிக்க பின்னணியில் ஒரு போர்க்களத்திற்கு தயாராவது போல் அமைந்துள்ளது. கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் பட பாணியில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது. தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் தேர்ந்தெடுத்து நடிக்கும் சூர்யா முதன்முதலாக இப்படத்தின் முலம் வரலாற்றுக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சூர்யாவுக்கு இதுபோன்ற கதைக்களம் புதிது என்பதால் படத்தின் வெளியீட்டை அனைவரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் கங்குவா படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தம்பி கார்த்திக்கு சிறுத்தை என்ற மாஸ் ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குநர் சிறுத்தை சிவா தற்போது அண்ணனுக்கும் கங்குவா படத்தை வெற்றி படமாக கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சூர்யா மற்றும் கார்த்தியை வைத்து இயக்கிய அமீர், மணிரத்னம், பாண்டிராஜ் போன்ற இயக்குநர்களுக்கு அடுத்ததாக சிறுத்தை சிவாவும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.

கங்குவா படத்தையடுத்து சுதா கொங்கராவின் புறநானூறு படத்தில் சூர்யா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...