கடவுளை நான் ஏன் நம்ப வேண்டும்? கடவுள் என்று ஒருவர் உள்ளாரா?

நம்மில் பலருக்கு தினந்தோறும் அல்லது வாரந்தோறும் கோவிலுக்கு சென்று கடவுளை தரிசிப்பது வழக்கம். அல்லது ஏதாவது ஒரு பண்டிகை நாட்களில் தவறாமல் நாம் கோயிலுக்கு செல்வோம். அப்படி தரிசனம் செய்து கோவில்களில் கொடுக்கப்படும் திருநீற்றை நெற்றியில் பூசி நாம் பக்தியை வெளிப்படுத்துவோம். இது தவிர கோவில்களில் விற்கப்படும் கயிறுகளையும், மணிகளையும் நாம் அணிவதினால் நமக்கு நல்லது ஏற்படும் என்பது நம்பிக்கை. மேற்கூறிய இந்த பக்தியும் பரவசமும் நம்மில் எப்படி வந்தது. 

நாம் இந்த ஆன்மிகப் பயணத்தை நோக்கி செல்வதன் காரணம் என்ன? இப்படி செய்வதால் உண்மையில் நமக்கு ஏதேனும் நிகழ்கிறதா…இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஒரே விடைத்தான். இதெல்லாம் நம் முன்னோர்கள் பின்பற்றிய பழக்க முறை.

இதையே நாமும் பின்பற்றுகிறோம். இவ்வுலகில் மதங்கள் என்று பாகுபாடு பார்ப்பதற்கு முன்பே நம்மிடம் பக்தி உருவாகி விட்டது. இந்த பக்தியை நாம் வெளிப்படுத்துவதற்கு தான் பல வித பெயர்களை கொண்டு அழைத்து கடவுளை வணங்கி வருகிறோம். 

கடவுள் என்பவர் ஒருவரே. ஆனால் அவரை வணங்குவது தான் பல விதம். இந்த கடவுள் என்னும் ஆன்மிக பாதையில் செல்வதால் நமக்கு புதிதாக நம்பிக்கையும், ஒரு புத்துணர்ச்சியும் ஏற்படுகின்றன.

இந்த ஆன்மிக பக்தியால் நமக்கு இதுபோன்ற நன்மைகள் ஏதேனும் நிகழும் என்றால் அவற்றை பின்பற்றுவது ஒன்றும் தப்பில்லை. 

எனவே கடவுளை நான் ஏன் நம்ப வேண்டும் என்ற தேவையில்லாத கேள்விகளை எழுப்புவதை விட, இதை பின்பற்றி இவற்றை நோக்கி செல்வது நல்ல பயனை தரும்.
 

Published by
Staff

Recent Posts