எம்.ஜி.ஆரை சுத்துப் போட்ட திருடர் கூட்டம்.. பதிலுக்கு எம்.ஜி.ஆர் செய்த சம்பவம்.. நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மை

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையில் மட்டும் வில்லன்களை துவம்சம் செய்பவர் அல்ல. நிஜ வாழ்விலும் தனி சூராக விளங்கினார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று. அது 1964-ம் வருடம். மதுரையில் ஒரு நாடகத்திற்குத் தலைமைதாங்க எம்.ஜி.ஆர் காரில் சென்று கொண்டிருக்கிறார். அவருடன் நடிகர் திருப்பதிசாமி, புத்தூர் நடராசன், கட்டரத்தினம், எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் சுரேந்திரன் ஆகியோர் சென்றனர். சாலையில் அவர்கள் செல்லும் போது நடுவே வெள்ளிக் கூஜா ஒன்று கீழே கிடந்தது.

நமக்கு முன்னர் சென்ற யாரோ ஒருவர் தவறவிட்டிருக்கலாம் என்று எண்ணி அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்து விடுவோம் என முடிவு செய்து அதை எடுக்க, திடீரென காரைச் சுற்றி 10 பேர் கொண்ட கொள்ளை கும்பல் அவர்களைச் சூழ்ந்து மிரட்டியது. ‘உங்ககிட்ட இருக்கிற பொருள்களைக் கொடுத்துட்டு ஓடிடுங்க.

உங்கள ஒண்ணும் செய்ய மாட்டோம்’ என்று எச்சரிக்க, அப்போது காரிலிருந்து ஒரு குரல் இப்போது தரலைன்னா என்ன பண்ணுவீங்க என்று கேட்க, ‘உங்க எல்லாரையும் அடிச்சுப் போட்டுட்டு பொருள்களை எடுத்துட்டுப் போவாம்.’ என்று மிரட்ட, உடனே காரில் இருந்த எம்.ஜி.ஆர். டிரைவர் சாகுலிடம்.. சாகுல் காரில் இருக்கும் கம்பை எடு என்று சொல்லி கம்பை கையில் வாங்க..

‘விடாமுயற்சி’யில் மகிழ்திருமேனிக்கு முன்னால் வந்த 3 இயக்குநர்கள்..விலகிய காரணம் இதான்..

உடனே எம்.ஜி.ஆர். அவர்களைப் பார்த்து, “நான் எந்தப் பொருளையும் தர மாட்டன். உங்களோட சண்டைக்கு நா ரெடி.. தனித்தனியா வர்றீங்களா.. இல்ல மொத்தமா வர்றீங்களா என்று கேட்டுக்கொண்டே காரிலிருந்து இறங்கியவரைப் பார்த்து ஒரு நொடி மொத்த திருடர் கூட்டமும் அதிர்ந்தது. இத்தனை தைரியசாலி யாருடா என்று எம்.ஜி.ஆரை வெளிச்சத்தில் பார்க்க அனைவரும் தொடை நடுங்கிப் போனார்கள். டேய் நம்ம வாத்தியாருடா..! என அவரைப் பார்த்து உற்சாகத்தில் இருந்தனர்.

அப்போது எம்.ஜி.ஆர். அவர்களைப் பார்த்து ஏம்பா..! உங்களுக்கெல்லாம் உடம்பு நல்லாத்தானே இருக்கு.. இப்படித் திருடுறீங்களே.. உங்களுக்கெல்லாம் கேவலமா இல்ல, இந்த ரோட்டுல எத்தனைபேர் போவாங்க.. வருவாங்க.. உங்கலாள எந்தளவு பாதிக்கப்படுவாங்கன்னு தெரியாதா? என்று அவர்களைப் பார்த்து சினத்துடன் கேட்க, அவர்கள் “அனைவரும் நாங்கள் இனி திருட மாட்டோம்” என்று அவருக்குச் சத்தியம் செய்து கொடுத்தனர்.

மேலும் எம்.ஜி.ஆர். அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.1000 கொடுத்து வேறு ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்திருக்கிறார். இது அவரது வாழ்வில் நிஜமாகவே நடந்த ஓர் நிகழ்வாகும்.

Published by
John

Recent Posts