லைலா கேட்ட ஒரே ஒரு கேள்வி.. படத்தில் இருந்து தூக்கிய தயாரிப்பாளர்.. சிம்ரனின் முதல் படத்தில் ஏற்பட்ட பஞ்சாயத்து..!

லைலா கேட்ட ஒரே ஒரு கேள்வி காரணமாக படத்தில் இருந்து தயாரிப்பாளர் அவரை நீக்கியதாகவும், அந்த படத்தில்தான் சிம்ரன் அறிமுகமானதாகவும் கூறப்படுகிறது.

பிரபுதேவா, சிம்ரன், அப்பாஸ், ரம்பா நடிப்பில் உருவான ‘விஐபி’ என்ற திரைப்படம் கடந்த 1997ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் முதலில் சுமாரான வசூலை கொடுத்தாலும் அதன் பிறகு சூப்பர் ஹிட் பாடல்கள் காரணமாக மிகப்பெரிய வசூலை கொடுத்தது. தயாரிப்பாளர் தாணு அவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது.

பிரபுதேவா – ஐஸ்வர்யா ராய் நடிக்க இருந்த படம்.. திடீரென ஏற்பட்ட மாற்றம்.. 25 வருடங்களுக்கு முன் இதே நாளில் வெளியான சொல்லாமலே!

முதலில் இந்த படத்தில் சிம்ரன் நடித்த கேரக்டரில் லைலா தான் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் இந்த படத்தின் பூஜை நடைபெற்ற போது லைலா அங்கு வந்தார். அப்போது ரிசப்ஷனில் உள்ளவர்கள் உங்களிடம் தயாரிப்பாளர் தாணு அவர்கள் இந்த செக்கை கொடுக்கச் சொன்னார், இதை அட்வான்ஸாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்தனர்.

அப்போது லைலா ஏன் தயாரிப்பாளர் என்னிடம் நேரில் வந்து செக்கை கொடுக்க மாட்டாரா? தயாரிப்பாளர் என்னை வந்து பார்க்க வேண்டாமா? என்று கேட்டதாக தெரிகிறது. இதற்கு பின்னர் தான் பூஜை அன்று இவ்வாறு பேசும் லைலா இந்த படத்திற்கு சரி வர மாட்டார் என்று இயக்குனரிடம் கூறி அவரை படத்தில் இருந்து தூக்கி விடுங்கள் என்று தாணு தெரிவித்ததாகவும் இதனை அடுத்து லைலா ‘விஐபி’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன் பிறகு தான் லைலா நடிக்க இருந்த கேரக்டரில் சிம்ரன் நடிக்க ஒப்பந்தமானார். அதுதான் அவருடைய முதல் தமிழ் படம். அது மட்டுமின்றி விஐபி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே அவருக்கு விஜய் ஜோடியாக ஒன்ஸ்மோர் படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

விஜய், சிம்ரன், ஏஆர் ரஹ்மான், எழுத்தாளர் சுஜாதா இருந்தும் படுதோல்வியான படம்.. விஜய் பேச்சை கேட்காத இயக்குனர்..!

விஐபி மற்றும் ஒன்ஸ்மோர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸானது. ஒரு அறிமுக நடிகையின் இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது என்பது மிகவும் அபூர்வமாக தமிழ் சினிமாவில் நடக்கும் நிலையில், அந்த அதிசயம் சிம்ரன் விஷயத்தில் நடந்தது. இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டானது. ஒரே ஒரு கேள்வி கேட்டதால் இந்த மிகப்பெரிய ஹிட் படத்தை இழந்து விட்டோமே என்று பின்னர் லைலா வருத்தப்பட்டதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் விஐபி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு பரபரப்பான சம்பவம் நடந்து கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுதான் பிரபுதேவாவின் திருமணம். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தான் டான்ஸ் கலைஞர் ரமலத் என்பவரை பிரபுதேவா காதலித்தார். இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.

இந்த படம் ரிலீசுக்கு முன்னரே பிரபுதேவா ரமலத் திருமணம் குறித்த தகவல் அவருடைய அப்பா சுந்தரம் மாஸ்டருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து ஒரு முன்னணி தயாரிப்பாளர் வீட்டில் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அப்போது சுந்தரம் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் பிரபுதேவா தனது திருமண முடிவில் பிடிவாதமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

பீடா கடையில் வேலை.. பாலு மகேந்திரா படத்தில் இருந்து நீக்கம்.. அதன்பின் கொடுத்த சூப்பர்ஹிட்.. விக்னேஷ் திரைவாழ்க்கை..!

அதன் பிறகு அந்த தயாரிப்பாளர் தான் பிரபுதேவாவுக்கு உதவி செய்து சென்னை அண்ணா நகரில் வீடு பார்த்து குடித்தனம் வைத்ததாகவும் கூறப்படுகிறது. பல்வேறு பரபரப்பான சம்பவங்களுக்கு பிறகு விஐபி திரைப்படம் வெளியானது. இந்த படம் தமிழ் சினிமாவில் நல்ல வெற்றியைப் பெற்ற ஒரு படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Bala S

Recent Posts