இன்று கோவிலில் கூட்டம் அதிகமாக இருப்பது ஏன்னு தெரியுமா? பக்தியா..? பயபக்தியா..?

இன்று நம்மில் பலரிடமும் எது பக்தி என்பதில் ஐயம் வந்துள்ளது. பக்தி எது? பயபக்தி எது? தேவைக்கு பக்தியா என்ற குழப்பம் பக்தர்கள் மத்தியில் எழுகிறது. அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

பக்தி என்றால் இறைவன் மீது வைக்கக்கூடிய நம்பிக்கை. அது உண்மையாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டும். அது முழுமையான சரணாகதியை இறைவனிடத்தில் நமக்குப் பெற்றுத் தர வேண்டும். காலம் மாற மாற இன்றைய பக்தி உருமாறி விட்டது.

இது பலருக்கும் பயபக்தியாகி விட்டது. பயந்து கொண்டு சாமி கும்பிடுவது தான் பயபக்தி. கும்பிடாவிட்டால் பிரச்சனை வந்துடுமா? பிரதோஷத்துக்குக் கோவிலுக்குப் போகலைன்னா ஏதும் பிரச்சனை வந்து விடுமா? விரதம் இருக்கலைன்னா எதுவும் விபரீதம் நடந்து விடுமா என்று பக்தி கொள்வது தான் பயபக்தி.

TDR Koil
TDR Koil

தேவைக்கு பக்தி என்பது இன்னொரு விசேஷம். சிலர் தனக்கு தேவை என்றால் மட்டும் கடவுளிடம் போய் வேணும் வேணும் என அழுது புரண்டு பக்தி கொள்வது. தேவை முடிந்ததும் கடவுளைக் கும்பிடாமல் அப்படியே விட்டு விடுவது. இதுதான் தேவைக்கு பக்தி.

அருணகிரி நாதர் முதல் பாம்பன் சுவாமிகள் வரை எல்லாரும் கடவுளிடம் கேட்கிறார்கள். கேட்பது தவறு அல்ல. அது கிடைத்த போதும் நாம் தொடர்ந்து கடவுளை வழிபட வேண்டும். துன்பத்தைத் தாங்குகிற தன்மையையும் கடவுளே தருகிறார். துன்பத்தில் இருந்து வெளியே வந்தபோதும் கடவுளைத் தொழ வேண்டும்.

என்ன ஆனாலும் இறைவனை வழிபடுவதை நாம் நிறுத்தவே கூடாது. இதை அடியார்கள் நல்லாவே செய்றாங்க. அவர்கள் எதுவும் கேட்பது இல்லை. உழவாரப்பணிகள் முதல் எல்லாம் கடவுளுக்காக செய்கிறார்கள். அவர்கள் தனக்காக எதுவும் கடவுளிடம் கேட்கவும் மாட்டார்களாம்.

அவர்களுக்கு மோட்சத்தையே தந்தாலும் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். தினமும் உன்னைக் கும்பிடுவதே போதும் என்பார்களாம். பக்தி என்பது வியாபாரம் மாதிரி இருக்கக்கூடாது. இறைவனிடம் போய் சரணாகதி அடைவதே உத்தமம்.

இன்றும் இறைவனைத் தேடி தேடி கோவில் கோவிலாகக் கும்பிடுகிறோம். சும்மா பேருக்குப்போய கும்பிடக்கூடாது. ஆனால் அது இறைவனுக்குப் போய் சேரக்கூடிய பக்தியாக வளர வேண்டும்.

மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையரக்கரசி தெரிவித்துள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...