முருகப்பெருமானுக்கு எத்தனை தம்பிகள் என்று தெரியுமா? அடேங்கப்பா… இவ்ளோ பேரா?

முருகப்பெருமானின் தம்பிகள் இருக்காங்களா என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஏன்னா அவர் தானே கடைசிப்பிள்ளை என்பது எல்லாருக்கும் தெரியும். சூரபத்மனை அழிக்க பெரும்படையுடன் முருகப்பெருமான் போனார். அப்போது அவரது தம்பிகள் வந்து இருப்பார்கள் அல்லவா? சிவனில் சரி பாதி தான் அம்பிகை. சிவபெருமானிடம் போய் தேவர்கள் எல்லாம் முறையிடுகிறார்கள்.

எங்களுக்கு உங்களைப் போலவே ஒரு குழந்தையைக் கொடு என்கிறார்கள். அப்போது தான் சூரபத்மனின் துன்பத்தில் இருந்து நாங்க வெளிவர முடியும் என்கிறார். அப்போது நெற்றிக் கண்ணைத் திறக்க அந்த அக்னியைத் தாங்க முடியாமல் எல்லாரும் ஓடுகிறார்கள். அம்பிகையும் பயந்து ஓடுகிறாள். அப்போது அவளது காலில் உள்ள பாதச் சிலம்பில் இருந்து நவரத்தினங்களும் தெறித்து ஓடுகிறது.

அப்போது சிவபெருமான் அதைக் கடைக்கண் பார்வையால் பார்க்கிறார். 9 நவரத்தினங்களும் 9 பெண்களாக மாறுகின்றனர். அவர்களை அருட்பார்வையால் சிவபெருமான் பார்க்க அந்த 9 பேரும் கருவுறுகின்றனர். இதைப் பார்த்த அம்பாளுக்குக் கோபம் வந்து விடுகிறது. நீங்கள் பல காலம் கர்ப்பத்துடனே இருக்கக் கடவது என சாபம் கொடுத்து விடுகிறார்.

அப்போது முருகப்பெருமானின் அவதாரமும் நிகழ்கிறது. அங்கு கருவில் இருந்த குழந்தை வளர்ந்து சிவயோகம் செய்யும் அளவுக்கு வளர்ந்து பெரிய குழந்தையாகி விடுகிறார்கள். ஆனால் பிரசவிக்க அனுமதி கிடைக்கவில்லை. அப்போது சிவபெருமானிடம் வேண்டுகிறார்கள்.

அவர் இதை யார் கொடுத்தாரோ அவரிடமே முறையிடுங்கள் என்கிறார். அப்போது அம்பிகை ஆற்றலில் நிறைந்த அருள் குழந்தைகளைப் பெறுவீராக என்கிறார். அப்படி அனுமதி பெற்ற அந்த நவசக்திகள் 0 குழந்தைகளை ஈன்றெடுக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

NV9
NV9

மாணிக்கவல்லியிடம் இருந்து வீரபாகு தேவர், மௌத்திகவல்லியிடம் இருந்து வீரகேசரி, புஷ்பராகவல்லியிடம் இருந்து வீரமகேந்திரர், கோமேதகவல்லியிடம் இருந்து வீரமகேஸ்வரர், வைடூரியவல்லியிடம் இருந்து வீரபுரந்தரர், வைரவல்லியிடம் இருந்து வீரராக்கதர், மரகதவல்லியிடம் இருந்து வீரமார்த்தாண்டர், பவளவல்லியிடம் இருந்து வீராந்தகரும், இந்திரநீலவல்லியிடம் இருந்து வீரதீரரும் தோன்றுகிறார்கள். அவர்கள் தான் நவவீரர்களாக மாறுகின்றனர்.

இவர்கள் வரும் போது அவர்களது வியர்வைத் துளியில் இருந்து லட்சம் பேர் தோன்றுகிறார்கள். அந்த 9 பேரும் சேர்த்து லட்சத்து 9 பேர் முருகனின் படைவீரர்கள் ஆனார்கள். அந்த 9 பேருக்கும் மிக அற்புதமான ஆயுதங்கள் கொடுத்து முருகனுக்கு என்றும் உடன்பிறந்த தம்பிகள், காவலாக இருக்கக் கடவது என ஆசீர்வதித்து அனுப்புகிறார்.

மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...