எத்தனை கடவுளைக் கும்பிட்டும் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லையா..? இதோ அதற்கான வழி!

கோவில் கோவிலா போய் சாமி கும்பிட்டுக்கிட்டுத் தான் இருக்கிறேன். எந்த முன்னேற்றமும் இல்லை என சிலர் சொல்வார்கள். சிலர் குழந்தைக்காக சஷ்டி விரதம் இருப்பார்கள். திருமணத்திற்காக பல சுலோகங்கள் படிக்கின்றனர். ஆனாலும் எதுவுமே நடக்கவில்லை என்பார்கள். இதற்கு என்ன தான் வழி? வாங்க பார்க்கலாம்.

நமது தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதற்காக வழிபட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் நமது வினைகள் என்ன என்று நமக்குத் தெரிவதில்லை. அது தீரும் அளவு நாம் வழிபடுகிறோமா என்பது தான் முக்கியம்.

ஒன்றை இறைவனிடம் கேட்பதாக இருந்தால் அதை உறுதியாக ஒரே தெய்வத்தைப் பற்றிக் கொண்டு கேட்க வேண்டும். இந்தக் கஷ்டத்தை நாம் இவ்வளவு நாள்கள் அனுபவிக்க வேண்டும் என்பது கர்மவினை. இது தீரும் வரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அதனால் சாமியை மாற்றி மாற்றிக் கும்பிடுகிறோம்.

Gods
Gods

மாணிக்கவாசகரில் இருந்து எல்லா அடியார்களும் இறைவன் ஒருவனே என்று தானே சொல்லி இருக்கிறார்கள். நம்பிக்கையோடு இருந்து அந்தத் தெய்வத்தை வழிபடுங்கள். சிவபெருமான், நரசிம்மர், விநாயகர், முருகன் என எந்தத் தெய்வத்திடம் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதோ அதை முழுமையாக நம்ப வேண்டும். அது தான் முழு பலனையும் பெற்றுத் தரும்.

மருத்துவத்தை நம்பினாலும் அதிலும் இறைவனை நம்ப வேண்டும். கடவுள் அருள் என்பது சீக்கிரம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது அறுசுவை உணவுக்குச் சமம். பாஸ்ட் புட் அல்ல. நமது வினைகளின் பயனுக்கு ஏற்ப அந்த உணவு நமக்குக் கிடைக்கும். இறைவனின் அனுக்கிரகம் நமக்குக் கிடைக்க வேண்டும் என்றால் இடைவிடாது இறைவனை வழிபட வேண்டும். இறைவன் நமக்கு சோதனை என்ற கசப்பைக் கொடுத்து பரிசோதிக்கிறார்.

நாம் அந்த சோதனைக் காலத்தில் எப்படி நடக்கிறோம் என்று இறைவன் நமக்கு வைக்கும் பரீட்சை தான் அது. அந்த நேரமும் நாம் இறைவனை வழிபடுகிறோமா, ஒழுக்கமாக நடக்கிறோமா என்று பார்க்கிறார். இந்த சோதனை காலமானது அவரவர் வினைக்கு ஏற்ப கொஞ்சம் மாறுபடும். இந்தக் காலத்தில் நீ என்ன வேணாலும் பண்ணு. எனக்கு உன்னை விட்டால் வேறு யாரு இருக்கா?

இந்த சோதனையில் இருந்து மீளக்கூடிய வழியையும் நீயே தான் தர வேண்டும் என்று இடைவிடாமல் இறைவனைப் பற்றி வழிபட வேண்டும். ஒரு தாய் குழந்தையை அடிக்கும்போது எவ்வளவு தான் வலித்தாலும் அந்தக் குழந்தை இடைவிடாமல் தாயைப் பற்றிக் கொண்டு தான் அழும். அதே போலத் தான் நாமும். இப்படி நாம் வழிபட்டு வந்தால் நம்மை ஒரு புடம் போட்டத் தங்கம் போல் மாற்றி ஜொலிக்கச் செய்வார் இறைவன் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.

மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...