மஞ்சுமல் பாய்ஸின் அபார வெற்றிக்கு காரணம் இளையராஜாவின் பாடலும், குணா குகையும் மட்டுமல்ல…!

இளையராஜா பாட்டும், குணா குகையும் தான் மஞ்சுமல் பாய்ஸ் படத்தை ஓட வைத்தது என்று சொல்லி விட முடியாது. அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன என்று சொல்கிறார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். வேறு என்னவெல்லாம் சொல்கிறார்னு பார்ப்போமா….

பழனின்னு ஒரு சின்ன நகரத்தில் 3 தியேட்டரில் ஹவுஸ்புல்லா ஓடிக்கொண்டு இருந்தது. பாட்டு, பைட், லவ் சீன்ஸ், பெண் கேரக்டர்கள்னு எதுவுமே கிடையாது. ஆனால் படம் 100 கோடி ரூபாய் வசூலை எட்டியது. அதில் 42 சதவீத வசூல் தமிழகத்தில் வந்தது. இதற்கு முன் சங்கராபரணம், மரோசரித்திரா தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்து நல்லா ஓடியது.

இதையும் தாண்டி மஞ்சுமல் பாய்ஸ் படம் எப்படி ஓடுச்சுன்னா அதோட கன்டன்ட் தான். ஒரு குகைக்குள்ள விழுந்த ஒருவனை எப்படிக் காப்பாத்துறதுங்கறது தான் கதை. இந்தக் கதையைத் தெரிந்து கொண்டு பார்த்தாலும் சுவாரசியமாகவே இருக்கிறது. அதற்குக் காரணம் திரைக்கதை.

Manjummal Boys cave
Manjummal Boys cave

இந்தப் படத்தைக் கொண்டு போய் ஒரு இளைஞன் கதையாக ஒரு தயாரிப்பாளரிடம் சொன்னால் யாராவது ஒத்துக்கொள்வார்களா? இதுதான் கதையான்னு கேட்பாங்க. முதலில் நான் பாராட்டுவது இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களைத் தான். ஷோபிர்சாகிர், பாபுசாகிர், ஷான் ஆன்டனி இவங்க தான் தயாரிப்பாளர்கள். இதில் ஷோபிர்சாகிர் தான் 10 பாய்ஸ்ல ஒருவரா வருவார். அவரு தான் குழிக்குள் விழுந்த நண்பனைக் காப்பாத்துவார். அவர் இதற்கு முன் நிறைய படங்களில் நடித்துள்ளார். எல்லாமே வித்தியாசமான கேரக்டர்கள் தான்.

இந்தக் கதையைப் படமாக்கலாம். இது ஓடும். ஆடியன்ஸ்சுக்குப் பிடிக்கும்னு நினைச்சு படத்தை எடுத்தார்களே அதனால அவர்களைத் தான் முதலில் பாராட்டணும். அதே போல படத்தின் இயக்குனர் சிதம்பரம். இவர் இந்தப் படத்தோட திரைக்கதைக்காக ஒரு வருஷம் வேலை செய்துள்ளார்.

அஜயன் சதீஷ் புரொடக்ஷன் டிசைனர். ஏன்னா குணா குகை தான் முக்கியமான விஷயம். இதுதான் தமிழக ஆடியன்ஸோட ரீச்சுக்குக் காரணம். அதே போல இளையராஜாவின் கண்மணி பாடலை ரசிக்காதவர்களே இல்லை. அதனால் இந்தப் பாடலை கிளைமாக்ஸில் யூஸ் பண்ணும்போது ஆடியன்ஸே கிளாப் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.

குகையை செட்டா போடும்போது எல்லாமே தெரிஞ்சிடும். ஆனா இந்தப் படத்துல ரொம்ப அழகா பண்ணிருந்தாங்க. ரியலா இருப்பது போல ஏசி, ஐஸ்கட்டி எல்லாம் வச்சிருக்காங்க. அப்போ தான் ஆர்டிஸ்டுக்கு நடிப்பைத் தாண்டி அந்த உண்மையான அனுபவம் முகத்தில் வரும். உண்மையான பாறைகளில் தான் மோல்டு எடுத்து வந்து படத்துல செட் போட்டுருக்காங்க.

குகையின் ஆழத்தைக் காட்ட 120 அடிக்கு செட் போட்டுருக்காங்க. சிஜியும் எந்த இடத்தில் பண்ணிருக்காங்கன்னே தெரியாது. அந்தளவுக்கு அற்புதமா பண்ணிருக்காங்க. ஒரே ஒரு இடத்தில் தான் குணா குகைக்கும், இந்தக்குகைக்கும் வித்தியாசம் காட்டியிருக்காரு. அவங்க நிக்கிற இடத்துல மஞ்சுமல் பாய்ஸ்னு எழுதிருப்பாங்க. அவங்க எல்லாரும் அங்க நிக்க வைக்கிறதுக்காக அந்த இடத்தை மட்டும் கொஞ்சம் அகலமாக காட்டியிருப்பாங்க.

இப்படி படத்துல ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செஞ்சிருக்காங்க. அதனால தான் படத்துக்கு இவ்ளோ பெரிய சக்சஸ் கிடைச்சிருக்கு. ஒரு படம் இங்க ஜெயிச்சதுன்னா அதே மாதிரி சாயல்ல 10 படங்கள் வந்துரும். அப்படி யாரும் எடுக்காதீர்கள் என்பதைத் தான் இந்தப் படம் நமக்குக் கற்றுத் தருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews