தியேட்டரில் இன்று ரிலீஸாகும் படங்கள் என்னென்ன…?

இன்று மார்ச் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, மகளிர் தினம் மற்றும் மகா சிவராத்திரி ஆகிய சிறப்பான நாள் என்பதால் தமிழில் சில படங்கள் இன்று திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ளது.

முதலாவதாக, இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், லொள்ளுசபா மாறன் என பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஜே. பேபி’ இன்று வெளியாகிறது. இப்படத்தை பா. ரஞ்சித், அபே ஆனந்த் சிங், பியூஸ் சிங், ஸூரப் குப்தா மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோர் இணைத்து தயாரித்திருக்கின்றனர். டோனி பிரிட்டோ இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒரு தாய் தனது திருமணமான மகன்களை விட்டு வீட்டிலிருந்து சென்று விடுகிறார். அவரை தேடி கண்டுபிடித்தார்களா என்பது கதை. நடிகை ஊர்வசி அபாரமாக இப்படத்தில் நடித்திருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்ததாக இயக்குனர்கள் சபரி மற்றும் குரு சரவணன் இணைத்து இயக்கிய திகில் திரைப்படம் ‘கார்டியன் ‘ இன்று வெளியாகிறது. ஹன்சிகா மோத்வானி, சுரேஷ் மேனன், ஸ்ரீமன் மற்றும் மொட்டை ராஜேந்திரன் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். விஜய் சந்தர் இப்படத்தை தயாரித்துள்ளார் மற்றும் சாம் சி. எஸ் இசையமைத்துள்ளார். ஒரு பெண்ணை சூழ்திருக்கும் ஆபத்துகளில் இருந்து ஒரு பேய் பாதுகாவலராக அப்பெண்ணை காப்பாற்றுவது போல் அமைந்திருக்கும் படம் என தெரிகிறது.

மூன்றாவதாக, ஜே. எஸ். பி. சதிஷ் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான ‘சிங்கப்பெண்ணே’ திரைப்படமும் இன்று வெளியாகிறது. இப்படத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து பிரபலமான நடிகை ஷில்பா மஞ்சுநாத், சமுத்திரக்கனி, சென்ராயன், ஆர்த்தி, மாதவி லதா, பிரேம் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் பெண்ணின் சாதனையை பற்றி பேசும் படம் என்பதால் சிறப்பாக மகளிர் தினத்தன்று வெளியிட்டு இருக்கின்றனர். நீச்சல் போட்டிகளில் சாதனை புரிந்து வரும் ஆர்த்தி என்கிற பெண் இப்படத்தில் நீச்சல் வீராங்கனையாக நடிக்கிறார். டிரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் சிவமணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...