நைட்டு ஃபுல்லா சரக்கா?.. விஜே ரம்யாவை பார்த்து அப்படியொரு வார்த்தை.. பயங்கர கடுப்பாகிட்டாரு!

விஜய் டிவியில் ஒளிப்பரபாகும் பல நிகழ்சிகளின் தொகுப்பாளினியான விஜே ரம்யா முன்னதாக கொடுத்திருந்த பேட்டியில் தனது விவாகரத்திற்கான காரணத்தை பற்றி பேசியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

விஜே ரம்யா தொடக்கத்தில் 2004ல் நடந்த மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்றிருந்தார். அதை தொடர்ந்து பெரும்பாலும் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வந்தார். கலக்க போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கலயாணம் போன்ற பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார்.

திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை:

மேலும் பிரித்விராஜ், பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான மொழி படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து அவர் மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, மாஸ்டர் மற்றும் அமலா பாலின் ஆடை உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.

மேலும் 2014-ம் ஆண்டு அபரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகிய பின் நடிப்பதை குறைத்துக் கொண்டு குடும்பத்தின் மீது கவனம் செலுத்த தொடங்கிய அவர் ஒரே வருடத்தில் கணவருடன் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து செய்தார். தற்போது ரம்யா பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்.

விவாகரத்து குறித்து ரம்யா முன்னதாக பேசிய பேட்டி ஒன்றில் திருமண வாழ்க்கை மிகவும் புனிதமானது, ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான பகுதி திருமணம், அதோடு எப்போது திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் யாரை செய்துகொள்ள வேண்டும் குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒரு பெண்ணின் விருப்பம் அதில் மற்றவர்கள் கருத்துகள் கூற வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் திருமணத்தை விரும்பி செய்துக் கொண்டு பின் பிரிந்து வருகிறாள் என்றாள் அதற்கு எதேனும் முக்கியமான காரணம் இருக்கும் ஆனால் நான் ஒரு நடிகையாக இருப்பதால் தான் என் மீதான கருத்துக்கள் மாறுகின்றன, நான் ஒரு சாதரான பெண்ணாக இருந்திருந்தால் என் மீது அனைவருக்கும் பரிதாபம் தான் ஏற்ப்பட்டிருக்கும். என் திரை வாழ்க்கை வேறு, என் பொது வழ்க்கை வேறு. என்னை பற்றி என் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு தெரிந்தால் போதும் வேறு யாரும் தெரிந்துகொள்ள தேவையில்லை.

சரக்கு போட்டியான்னு கேட்ட ஒளிப்பதிவாளர்:

அதை தொடர்ந்து நான் படித்து கொண்டே நடித்துக் கோண்டிருக்கும் போது சரியாக தூக்கம் இல்லாததால் என் கண் சிவந்ததை பார்த்து ஒரு கேமரா மேன் என்னை நைட் ஃபுல்லா சரக்கான்னு கேட்டாரு, அதை கேட்டு நான் தனியாக சென்று அழுதேன் என விஜே ரம்யா த்ரோபேக் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

டிடி நீலகண்டன், விஜே ரம்யா என பல தொகுப்பாளினிகளின் வாழ்க்கையில் திருமணம் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்காமல் துயரத்தை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. விஜே அர்ச்சனாவும் தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். ஆனால், மகள் ஸாரா அதை தடுத்து நிறுத்தியிருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...