விஷால் சொன்ன ஒத்த வார்த்தை : நெகிழ்ந்து போன ரசிகை : வைரலாகும் வீடியோ

தமிழில் செல்லமே படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் விஷால். உயரமான தோற்றமும், மாநிறமும், இரும்பு உடலும் கொண்ட விஷாலை மக்கள் ஹீரோவாக ஏற்க தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அதிகமாக ஆக்சன் படங்களில் நடித்து தன் திறமையை நிரூபித்தார். இயக்குநர் பாலாவின் அவன்-இவன் படத்தில் ஆர்யாவுடன் சேர்ந்து நடித்த இவரின் நடிப்புத் திறன் பேசப்பட்டது. அப்படத்தில் மாறுகண் பார்வை கொண்டவராக நடித்ததனால் அவருக்கு கண்ணில் பிரச்சனை ஏற்பட்டு அது சரியாகவே பல மாதங்கள் ஆனது.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் விஷாலுக்கு சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி பெரும் வெற்றியைக் கொடுத்த நிலையில் தற்போது இயக்குனர் ஹரி இயக்கும் பெயரிடப்படாத விஷால் 34 படத்தில் நடித்து வருகிறார். தாமிரபரிணி, பூஜை ஆகிய படங்களுக்குப் பின் ஹரியுடன் சேரும் மூன்றாவது படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் விவசாயிகளைச் சந்தித்தார் விஷால். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு பெண் ஒருவரிடம் “நீங்க சாப்டீங்களா“ என்று கேட்டுள்ளார். அப்பெண் இல்லை எனக் கூற உடனே தனது உதவியாளர்களிடம் “ஏன் இன்னும் இவங்களுக்கு சாப்பாடு  போடல. முதல்ல போய் சாப்பிட்டு வாங்க..“ என்று அன்புக் கட்டளை போட்டார்.

ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித்துடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்ட டெல்லி கணேஷ்.. இவ்வளவு நடந்திருக்கா?

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக விஷாலின் ரசிகர்கள் உங்கள் ரசிகன் எனச் சொல்லிக் கொள்வதில் பெருமையாக உள்ளது என கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர். மேலும் தீபாவளி அன்று மொத்த பட யூனிட்டுக்கும் கறிவிருந்து வைத்து அவர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார் விஷால்.

இதுமட்டுமன்றி அண்மையில் ஒரு தெருவில் உள்ள பெண்கள் தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் அவரிடம் கோரிக்கை விடுக்க உடனே களத்தில் இறங்கி அப்பகுதிக்கு தனது சொந்த செலவில் குடிநீர் தொட்டி அமைத்துக் கொடுத்திருக்கிறார் விஷால்.

நடிகர் சங்கத்திலும் பொதுச் செயலாளராக இருக்கும் விஷால் நடிப்பது மட்டும் தனது வேலையன்றி இதுபோன்ற சமூக நோக்கிலும் செயல்படுவது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews