விருச்சிகம் பிப்ரவரி மாத ராசி பலன் 2023!

5 ஆம் இடத்தில் குரு பகவான் உள்ளார், செவ்வாயின் பார்வை சிம்மத்தின் மேல் விழுகின்றது. வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும்; வேலைப்பளுவால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

புது வேலைக்கு முயற்சித்தாலும் வேலைப்பளு கொண்டதாகவே இருக்கும். தொழில்ரீதியாக போராட்டத்தினைக் கொண்ட காலமாக இருக்கும். பணரீதியாக பெரிய அளவில் பிரச்சினைகள் இருக்காது.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை சுப காரியங்கள் வீட்டில் நடைபெறும் மாதமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான அன்பு அதிகரிக்கும்.

காதலர்கள் திருமணத்தினை நோக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்களைப் பொறுத்தவரை திட்டமிட்டபடி உயர்கல்வியினை நோக்கிப் படிப்பீர்கள்.

சூர்யன்- புதன் உங்களுக்குச் சாதகமாக இருந்தாலும் சனி பகவானால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும், மேலும் சனி பகவானால் குழப்பங்கள் நிறைந்து காணப்படுவீர்கள்.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை வேலைப் பளுவினைக் கொண்டதாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்கப் பெறும். மன நிறைவான குடும்ப சூழல் ஏற்படும்.

வீட்டின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உடல் ஆரோக்கியம்ரீதியாக சிறு சிறு செலவுகள் ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews