விருச்சிகம் அதிசார கும்ப சனி பெயர்ச்சி பலன்கள் 2023!

உங்களுடைய ஆராய்ச்சி மனப்பான்மையால் எதையும் அறிந்து கொள்ளும் விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு அனைத்து கிரகங்களும் நன்மைகளை வாரி வழங்கிக் கொண்டே இருக்கப் போகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக அவதிப்பட்டு கொண்டு இருந்த நீங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்களுடைய வயது, அனுபவம், கல்வித் தகுதி போன்றவைகளுக்கு பொருத்தமான வேலை அல்லது தொழிலில் ஈடுபட துவங்கியிருப்பீர்கள். சேமிக்க ஆரம்பித்து இருப்பீர்கள்.

குலதெய்வத்தின் அனுக்கிரகம் உங்களுக்கு கிடைக்கும். இப்போதும் வாழ்க்கை வளமானதாக இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலை இந்த வருடம் முழுவதும் தொடரும்.

ஒரு சிலர் மட்டும் தவறான அணுகுமுறை மற்றும் நட்பு வட்டத்தால் கடன் அல்லது தேவையில்லாத சிக்கலில் அவதிப்பட்டு கொண்டிருப்பீர்கள். அவர்களுக்கு இந்த வருடம் கடன்கள் தீர்ந்துவிடும். சிக்கல்களில் இருந்து மீண்டு விடுவீர்கள்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை அல்லது வளர்பிறை பஞ்சமி அன்று உங்கள் குலதெய்வம் கோவிலுக்கு செல்லுங்கள். இந்த இரண்டு நாட்களில் மட்டுமே குலதெய்வம் வரங்களை வாரி வழங்குகிறது. இதில் ஏதாவது ஒரு நாளில் உங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று உங்கள் குலதெய்வத்துக்கு பிடித்த படையல் வைத்து ஒரு முகூர்த்த நேரம் வழிபாடு செய்யுங்கள்.

ஒரு முகூர்த்த நேரம் என்பது இன்றைய காலகட்டத்தில் 90 நிமிடங்களாகும். இவ்வாறு இந்த வருடம் முழுவதும் (மாதம் ஒருமுறை வீதம்) குலதெய்வ வழிபாட்டை பின்பற்றி வருவதன் மூலமாக உங்கள் வருமான அளவு அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வந்துவிடும். கொடுக்க வேண்டிய பணத்தை நீங்கள் குறிப்பிட்ட சொன்ன நேரத்தில் கொடுத்து விடலாம்.

சிலர் வாகனங்கள் அல்லது வீடு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பீர்கள். இந்த முயற்சி இந்த வருடத்தில் வெற்றியைத் தரும். உங்கள் கையில் போதுமான அளவு ரொக்கம் இருந்தாலும் சிறிதளவு வங்கிக் கடன் வாங்கி வாகனம் அல்லது வீடு வாங்குவது அவசியமாகும். அரசு வங்கியில் மட்டும் கடன் வாங்கவும். இதன் மூலமாக நீங்கள் வாங்கும் வாகனம் அல்லது வீடு இந்த பிறவி முழுக்க உங்களுக்கு நிலைத்து நிற்கும்.

உங்களுடைய கடன் வெகு விரைவில் தீர வேண்டும் என்றால் நீங்கள் ஒன்பது செவ்வாய்க்கிழமை அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும். வாரம் ஒரு செவ்வாய்க்கிழமை அல்லது மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை என்று 9 செவ்வாய்க்கிழமைகள் கிரிவலம் செல்வதால் உங்களுக்கு எப்பேர்பட்ட கடன் இருந்தாலும் அது தீர்வதற்கான வழி அண்ணாமலையாரின் அருளால் கிடைத்துவிடும்.

சிவ ராஜ யோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
+919629439499
ராஜபாளையம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.