விஜய்யின் திடீர் வெளிநாட்டுப்பயணம்… உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

சினிமா மற்றும் அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நடிகர் விஜய் பாதியில் நிறுத்திவிட்டு திடீரென வெளிநாடு கிளம்பி சென்றதன் பின்னணி குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறிய ரகசிய தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனால் லியோ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே விஜய் அவ்வப்போது தன்னுடைய அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் விஜய் திடீரென வெளிநாடு கிளம்பி சென்றுள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜயின் திடீர் வெளிநாடு பயணம் எதற்காக என்பது புரியாத புதிராக இருந்த நிலையில் அதன் பின்னணியில் இருக்கும் ரகசியத்தை சர்ச்சைக்குரிய சினிமா பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் போட்டு உடைத்துள்ளார்.

அதன்படி நடிகர் விஜய்க்கு வரும் ஜூலை 28ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நடிகர் விஜய் இந்த விழாவில் கலந்து கொள்வதை தவிர்ப்பதற்கு தான் வெளிநாடு சென்று இருக்கிறார் என்று கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

சுவிட்சர்லாந்தில் மாஸ் காட்டும் அஜித்! வைரலாகும் புகைப்படம்!

ரஜினியின் ஜெயிலர் படத்தில் கன்னடா நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், மிர்னா, யோகி பாபு, விநாயகன், சரவணன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த பிரபலங்கள் அனைவரும் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...