சுவிட்சர்லாந்தில் மாஸ் காட்டும் அஜித்! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச் வினோத்தின் இயக்கத்தில் துணிவு படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியானது.இப்படம் 2023 இல் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக சாதனை படைத்துள்ளது. மேலும் வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அஜித் துணிவு படத்தை தொடர்ந்து அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கும் விடா முயற்சியில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு லைகா ப்ரொடெக்க்ஷன் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் திரிஷாவுடன் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் நடிகை திரிஷா அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி உள்ளதால் நடிக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.தற்பொழுது படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Ajith Kumar is currently holidaying in Switzerland.

முன்னதாக, அஜித் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றுவதாக இருந்தது. ஆனால் திரைப்படத் தயாரிப்பாளருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளால் படம் கைவிடப்பட்டது.

அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கும் அஜித், அடிக்கடி பைக் பயணங்களை மேற்கொள்வதும், வெளிநாடு பயணங்களில் விடுமுறையை கொண்டாடுவதும் வழக்கம்.

முந்தானை முடிச்சி ஹீரோயினின் 700வது படம்! ரிலீஸ் குறித்து மாஸ் அப்டேட்!

அந்த வகையில் அஜித் தற்பொழுது சுவிட்சர்லாந்தில் ஜாலியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் அஜித்தை ரசிகர் ஒருவர் விமான நிலையத்திலும், சுவிட்சர்லாந்தின் தெருக்களிலும் சந்தித்துள்ளார், அங்கு அவர் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.

அந்த புகைப்படம் தற்பொழுது அஜித் ரசிகர்களால் வைரலாகி வருகிறது. மேலும் இந்த போட்டோவில் அஜித் பார்ப்பதற்கு செம மாஸாகாக உள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...