17 வயதிலேயே செயினை கழட்டி கொடுத்த விஜயகாந்த்.. வாழும் கர்ணன் என பாராட்டு..!

திரை உலகைச் சேர்ந்த யாரை கேட்டாலும் விஜயகாந்த் அளவிற்கு உதவி செய்தவர்கள் யாரும் இல்லை என்று கூறுவார்கள். திரையுலக வள்ளல் என்றால் எம்ஜிஆரை அந்த காலத்தில் சொல்வது போல் எம்ஜிஆரை அடுத்து அதிகமாக பொதுமக்களுக்கும் திரை உலகை சேர்ந்தவர்களுக்கும் உதவி செய்தது என்றால் அது விஜயகாந்த் தான்.

விஜயகாந்த் திரை உலகிற்கு வருவதற்கு முன்பே 17 வயதிலேயே தனது உதவி மனப்பான்மையை வெளிப்படுத்தி உள்ளார். விஜயகாந்தின் மாமா அவருக்கு ஆசையாக ஒரு தங்க செயினை போட்டு இருந்தார். இந்த நிலையில் ரிக்சா தொழிலாளியின் மகன் படிப்புக்கு காசு இல்லாமல் இருந்த செய்தி கேட்டு உடனடியாக அவர் யோசிக்காமல் செயினை கழட்டி, ‘இந்த செயினை அடகு வைத்து படித்துக் கொள்’ என்று கொடுத்தார். அதன் பிறகு தன்னுடைய மாமா கேட்ட போது  சமாளித்து அவரிடம் அடி வாங்கியதும் உண்டு. இதனை அவருடைய மனைவி பிரேமலதா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

விஜயகாந்த் உடன் நதியா நடித்த ஒரே படம்.. பாலிவுட் இசையமைப்பாளர்.. வெளிநாட்டு படப்பிடிப்பு என பிரமாண்டம்..!

அதேபோல் பாடகியும் நடிகையுமான குஞ்சரம்மாள் காலமான போது அவரது  குடும்பத்தினர் பணம் இல்லாமல் தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த விஜயகாந்த் யாருக்கும் தெரியாமல் பத்தாயிரம் ரூபாய் மீசை ராஜேந்திரனிடம் கொடுத்து, ‘குஞ்சம்மாள் குடும்பத்தினரிடம் நான் கொடுத்ததாக போய் கொடுத்துட்டு வந்து விடு’ என்று கூறியிருக்கிறார். இதையும் மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

vijayakanth

வானத்தை போல படத்தின் படப்பிடிப்பின் போது அந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகை கௌசல்யா. அவர் படப்பிடிப்புக்கு வந்து கொண்டிருந்த போது கன மழை பெய்தது. அந்த நிலையில் திடீரென அவருடைய கார் பஞ்சர் ஆகிவிட்டது. அப்போது அந்த பக்கம் வந்த விஜயகாந்த் தற்செயலாக கௌசல்யாவை பார்த்தவுடன் தன்னுடைய காரில் இருந்த ஸ்டெப்னியை அவர் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் கொடுத்தார். இதை கௌசல்யா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதேபோல் கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் அந்தமானில் தங்கி இருந்த நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஊர் திரும்ப முடியாமல் தமிழக மீனவர்கள் அந்தமானில் தவித்த போது உடனடியாக அந்தமானில் உள்ள தேமுதிக நிர்வாகிக்கு போன் செய்த விஜயகாந்த், தமிழக மீனவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுக்குமாறு கூறியிருந்தார்.

vijayakanth

நடிகர் சத்யராஜ் நடித்த வள்ளல் என்ற திரைப்படம் ஒரு சில காரணங்களால் வெளியாக முடியாமல் இருந்த நிலையில் விஜயகாந்த் தான் அந்த படத்தை வெளியிட அனைத்து உதவிகளும் செய்துள்ளார். விஜயகாந்த், சத்யராஜ் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் திரை உலகிற்கு வந்தவர்கள் என்பதும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த் படத்திற்கு 3 இசையமைப்பாளர்.. இளையராஜா மற்றும் சங்கர்-கணேஷ்.. என்ன காரணம்..?

அதேபோல் விஜய், சூர்யா ஆகிய இருவருக்குமே விஜயகாந்த்  உதவி செய்துள்ளார். விஜய் ஹீரோவாக ஒரு சில படங்களில் நடித்தாலும் பெரிய ஹிட் இல்லாமல் இருந்த நிலையில்  விஜய்யுடன் ‘செந்தூர பாண்டி’ என்ற படத்தில் நடித்து, விஜய் பிரபலமாக உதவி செய்தார். அதேபோல் பெரியண்ணா என்ற படத்தில் சூர்யாவுடன் நடித்து சூர்யா பிரபலமாகவும் அவர் உதவி செய்தார்.

விஜய் நடித்த தலைவா என்ற திரைப்படம் ரிலீஸ் செய்ய முடியாமல் திணறிய நிலையில் அப்போது அரசியல்வாதியாக பிரபலமாக இருந்த விஜயகாந்த், விஜய்யிடம் தானாகவே முன்வந்து நான் இந்த படத்தை ரிலீஸ் செய்ய உதவி செய்யட்டுமா என்று கேட்டதாகவும் ஆனால் விஜய் வேண்டாம் என மறுத்து விட்டதாகவும் கூறப்படுவது உண்டு.

vijayakanth

வாங்கிய கடனுக்காக இசையமைத்த டி.ராஜேந்தர்.. சம்பளத்தை திருப்பி கொடுத்த விஜயகாந்த்.. ‘கூலிக்காரன்’ படத்தின் சுவாரஸ்யம்..!

இதுபோல் பல நிகழ்வுகள் விஜயகாந்த்  உதவி செய்தது தெரிய வருகிறது. விஜயகாந்த் தற்போது உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரால் பயனடைந்த ஆயிரக்கணக்கானோர் அவர் மீண்டும் குணம் ஆக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...