ரஜினி அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்… கேப்டன் விஜயகாந்த் தான் பொருத்தம்… எந்தப்படம்னு தெரியுமா?

அந்தக்காலத்தில் விஜயகாந்த் நடிக்க வேண்டிய பல படங்கள் ரஜினிக்கும், ரஜினி நடிக்க வேண்டிய பல படங்கள் விஜயகாந்துக்கம் சென்றன. இருவருமே தரமான நடிகர்கள் தான். ஆனால் அவர்களது மேனரிசங்கள் தான் வெவ்வேறு. மற்றபடி காட்சியுடன் ஒன்றிப் போய் தான் இருவருமே நடிப்பார்கள்.

அதனால் தான் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். ரஜினி, கமல் என்ற இரு பெரிய ஜாம்பவான்களுக்குப் பிறகு தமிழ்த்திரை உலகில் உச்சநட்சத்திரமாக முன்னேறி வந்தவர் கேப்டன் விஜயகாந்த் தான்.

விஜயகாந்த் நடிகர் ரஜினியைப் போல கருப்பாக இருந்து தனது தளராத முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும், உழைப்பாலும், திறமையாலும் தமிழ்த்திரை உலகில் முன்னுக்கு வந்தவர்.

ஆரம்பகாலத்தில் பல அவமானங்களைத் தாங்கித்தான் கேப்டன் அந்தஸ்துக்கு உயர்ந்தார் விஜயகாந்த். சினிமாவுக்குள் நுழைந்தபோது இவர் நடிகர் ரஜினிகாந்தை வியந்து பார்த்தவர். அதன்பிறகு வளர வளர அவருக்கே ஒரு காலத்தில் டஃப் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

இவர் எந்தப் படத்தில் நடித்தாலும் அது ஆவரேஜ் ஹிட்டானது. ரசிகர்கள் இவர் படத்தை நம்பி தியேட்டருக்குள் வருவார்கள். அவர்களின் ஆவலையும் பூர்த்தி செய்ய தவறமாட்டார் கேப்டன். இவர் தான் நடிக்கும் எந்தப் படத்திலும் மிகைப்படுத்தப்படாத நடிப்பை வெகு யதார்த்தமாக வெளிப்படுத்துவதில் வல்லவர்.

ஏ.ஆர்.முருகதாஸின் ரமணா பட வாய்ப்பும் அவருக்கு அப்படித்தான் வந்ததாம். இதுகுறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் எம்எஸ்.பிரபு இவ்வாறு கூறுகிறார். இந்தப்படத்தில் முதலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் நடிப்பதாக இருந்ததாம்.

படத்தில் கதாநாயகன் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். அந்த வேடத்தில் ரஜினி நடித்தால் அவரது ஹீரோயிசம் தெரிந்து விடும். அதனால் யதார்த்தம் அடிபட்டுவிடும். அதேநேரம் அந்த வேடத்தில் விஜயகாந்தை நடிக்க வைத்தால் கனகச்சிதமாகப் பொருந்திவிடுவார் என்று நான் சொன்னதும் தான் இந்தப் படத்திற்குள் விஜயகாந்த் வந்தார்.

Ramana
Ramana

ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த தமிழகக் கல்லூரி மாணவர்களையும் திரட்டுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அதற்கு விஜயகாந்த் மாதிரி ஒரு ஆள் சொன்னால் தான் வருவார்கள் என்பதை உணர்ந்து கொண்டு அந்தப் படத்தை செம மாஸாக எடுத்தார்களாம்.

படமும் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான கதை அம்சத்துடன் செல்லும். படத்தின் இமாலய வெற்றிக்கு விஜயகாந்தின் அற்புதமான நடிப்பே காரணம் என்றால் மிகையில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...