18 வருடத்திற்கு முன் வெளியான திரைப்படத்தின் இயக்குநரை சமீபத்தில் பாராட்டிய விஜய்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இரண்டாவது முறையாக இணைந்து நடித்த திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் கடந்த மாதம் 19 ஆம் தேதி மிக பிரமாண்டமாக பல திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த திரைப்படம் தற்போது வரை 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து மல்டி ஸ்டார் திரைப்படமாக உருவாகியிருந்த லியோ திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். தளபதி 68 படத்தின் படப்பிடிப்புகள் தற்பொழுது வெளிநாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தளபதி விஜய் இளம் இயக்குனர்களுடன் இணைந்து அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து வந்தாலும் விஜய்க்கு வெற்றியை கொடுத்த சில இயக்குனர்களை அவர் என்றும் மறப்பதில்லை.

அந்த வகையில் 2005 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் திருப்பாச்சி, அதே ஆண்டு தீபாவளி முன்னிட்டு வெளியான திரைப்படம் சிவகாசி. இந்த இரண்டு திரைப்படத்தையும் இயக்கியவர் இயக்குனர் பேரரசு. பொங்கலை முன்னிட்டு வெளியான திருப்பாச்சி திரைப்படம் 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வெற்றி கொடி பதித்தது அதை போல் சிவகாசி திரைப்படமும் 150 நாட்களுக்கு மேல் ஓடி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது.

முதல் படமான திருப்பாச்சியில் விஜய் கிராமத்து இளைஞனாக தோன்றி பின் சென்னைக்கு சென்று ரவுடிகளை சம்பவம் செய்வது படத்தின் மைய கதையாக இருக்கும். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருப்பார். அதைத் தொடர்ந்து தீபாவளிக்கு வெளியான சிவகாசி திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் விஜய் நகரத்தில் வாழும் ஒரு சாதாரண இளைஞனாக இருந்து தன் குடும்பத்தை சந்திக்க வேண்டும் என்பதற்காக கிராமத்திற்கு வருவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

ஹாலிவுட் லெவல் ஆக்சனில் உருவாகும் கமலின் 234வது திரைப்படம்!

இந்த இரண்டு திரைப்படமும் விஜய்யின் வெற்றி திரைப்படங்களில் வரிசையில் இடம்பெற்றுள்ளவை. சமீபத்தில் இந்த திரைப்படங்களை இயக்கிய பேரரசு அவர்கள் ஒரு யூட்டியூப் சேனலுக்கு அழைத்த பேட்டியில், 18 வருடங்களுக்குப் பின் வெளியான திரைப்படத்திற்கு தளபதி விஜய் தன்னை சமீபத்தில் பாராட்டியதாக கூறியிருந்தார். அதாவது சிவகாசி திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் முடிந்துள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படத்தை மீண்டும் பார்த்த தளபதி விஜய் இயக்குனர் பேரரசு அவர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உள்ளார்.

அப்போது இயக்குனரிடம் தளபதி விஜய் என்ன சார் படத்தை இப்படி மிரட்டலாக எடுத்து வைத்துள்ளீர் என்று கேள்வி கேட்டுள்ளார். சிவகாசி படத்தை இப்பொழுது பார்க்கும் பொழுதும் அவ்வளவு மிரட்டல் அடியாக அதிரடி காட்சிகள் இடம் பெற்றுள்ளது என தளபதி விஜய் புகழ்ந்துள்ளார். அதன் பின் ஏன் இன்னும் படம் எடுக்கவில்லை நாம் ஒருநாள் சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த தகவலை இயக்குனர் பேரரசு மிக மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் தளபதி விஜய் 18 வருடத்திற்கு முன் வெளியான படத்தை மீண்டும் பார்த்து இயக்குனரை தொடர்பு கொண்டு பாராட்டுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. தளபதி விஜய்யின் அந்தப் பெருந்தன்மையை இயக்குனர் பேரரசு புகழ்ந்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews