ஹாலிவுட் லெவல் ஆக்சனில் உருவாகும் கமலின் 234வது திரைப்படம்!

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் அடுத்தடுத்து பெரிய இயக்குனர்களுடன் கைகோர்த்து வருகிறார். அடுத்தடுத்து சில வெற்றிப் படங்களுக்கு மத்தியில் விக்ரம் திரைப்படம் கமலுக்கு கம்பேக்காக அமைந்தது. கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார். சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படத்தின் வீடியோ ஒன்று வெளியாகி மக்களிடையே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் எச் வினோத் இயக்கத்தில் தனது 233 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படம் முதலில் நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாற்று கதையை படமாக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதன் பின் இந்த கதையில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு தற்பொழுது ஆக்சன் திரைப்படம் ஆக இந்த படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் ராணுவ அதிகாரியாக களம் இறங்கி நடித்து வருகிறார் சமீபத்தில் அவர் ராணுவ உடையுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமல் நடிக்கும் 234வது திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்க உள்ளார். நாயகன் படத்திற்கு பின் பல ஆண்டுகள் கடந்து இணையும் இந்த மணிரத்தினம் கமல் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு மக்கள் அதிக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தில் திரிஷா முன்னணி கதாநாயகியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

இயக்குனர் மணிரத்தினம் கமல் இணையும் 234 வது படத்தின் ப்ரோமோ டீசர் தற்பொழுது வெற்றிகரமாக உருவாகியுள்ளது. இந்த டீச்சர் கமலின் பிறந்தநாள் அன்று நவம்பர் 7ஆம் தேதி வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கு காரணம் இந்த திரைப்படத்தில் சண்டை மாஸ்டர்களாக அன்பறிவு சகோதரர்கள் இணைந்துள்ளனர்.

கமலின் விக்ரம் திரைப்படத்தில் அன்பறிவு அவர்களின் சண்டைக் காட்சிகள் அதிகம் பிடித்தவன் காரணமாக கமலின் 234 வது திரைப்படத்திலும் அவர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என கமல் சிபாரிசு செய்துள்ளார். அதன்படி கமல் மணிரத்தினம் இணையும் 234 வது திரைப்படத்தில் அன்பறிவு மாஸ்டர்களின் தெறிக்கவிடும் சண்டைக் காட்சிகள் இடம் பெற உள்ளது என்ற தகவல் உறுதியாகி உள்ளது.

நடிகர் சிவகுமாரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல உதவிகள் செய்த சிவாஜி கணேசன்!

இந்த படத்தின் கதை குறித்து அன்பறிவு மாஸ்டர் கூறிய சில கருத்துக்கள், இந்த திரைப்படத்தில் அமைய இருக்கும் சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் படத்திற்கு இணையாக வேற லெவலில் அமைய உள்ளதாகவும் இந்த படத்தின் கதையைக் கேட்டவுடன் அவர்கள் பிரம்மிப்பு படைத்ததாகவும் இந்த படத்திற்கு தங்களை 100% பங்களிப்பை உறுதியாக அளிக்க உள்ளதாகவும் தங்களது எண்ணம் செயல் சொல் சிந்தனை என அனைத்திலும் இந்த படத்தின் சிந்தனை தான் உள்ளது என்று இந்த படத்தின் மீது அவர்கள் கொண்ட ஆர்வத்தையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மக்களிடையே அதிகரிக்கச் செய்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...