விஜய் தான் நம்பர் ஒன். மீண்டும் அடித்து கூறிய தில்ராஜ்!

தமிழ் திரை உலகில் விஜய்தான் நம்பர் ஒன் என சமீபத்தில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது மீண்டும் விஜய் தான் நம்பர் ஒன் என அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாரிசு திரைப்படத்தை தயாரித்த தில் ராஜு சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் தான் நம்பர் 1 என்றும், அவர் நடித்த வாரிசு திரைப்படத்திற்கு போதுமான திரையரங்குகள் ஒதுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் ஒரு சிலர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். தமிழ் திரையுலகில் நம்பர் ஒன், நம்பர் 2 என்று கூறுவதற்கு இவர் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இது குறித்து தில் ராஜு விளக்கமளித்துள்ளார். விஜய் மற்றும் அஜீத் படங்களுக்கு தமிழகத்தில் திரையரங்குகள் சமமாக ஒதுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் விஜய்தான் பெரிய ஸ்டார். அவர் நடித்த திரைப்படங்கள் தான் அதிக வசூல் செய்துள்ளன.

விஜய் நடித்த கடைசி 6 படங்கள் தமிழகத்தில் மட்டும் 60 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது. ஒரு படம் ஹிட் அல்லது தோல்வி என்பது அந்த படத்தின் வசூலை பொறுத்துதான் அமையும் என்பதால் விஜய்யின் படங்கள் தான் சீரான வசூல் செய்து உள்ளது. எனவே அவர்தான் மற்றவர்களைவிட நம்பர் ஒன் இடத்தில் உள்ளார் என்று தில் ராஜு விளக்கம் அளித்துள்ளார். அவரது இந்த விளக்கம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.