ரசிகர்களின் செயலால் கடுப்பான விஜய்! அதுக்குன்னு அப்படியா பண்ணுவாங்க? வைரல் வீடியோ!

தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் வாரிசு திரைப்படம் பொங்கல் 2023 வெளியாவதற்கு தயாராக உள்ளது. தில் ராஜு தயாரிப்பில், விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் படம் வெளியாக உள்ளது .

ஜனவரி தொடக்கத்தில் படம் வெளியாக உள்ளதால் படப்பிடிப்பு விறுவிறுப்பான வேகத்தில் நடந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.விஜய் தற்போது பெல்லாரியில் ஒரு சார்ட்பஸ்டர் பாடலின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார், இது நவம்பர் 19 ள் முடிவடைந்தது.

“பாடல் படப்பிடிப்பை முடித்த உடனேயே, படத்தின் அதிரடியான கிளைமாக்ஸை படமாக்க விஜய் மற்றும் ஒட்டுமொத்த குழுவும் ஹைதராபாத் செல்ல உள்ளனர், இது 10 நாள் படப்பிடிப்பு, மேலும் க்ளைமாக்ஸ் முழுவதும் ஆக்‌ஷன் மற்றும் எமோஷன் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வீட்டுக்குள் புகுந்து ஓனரையே அலறவிட்ட அட்டகாச குரங்கு; பரபரப்பு காட்சிகள்!

படத்தின் க்ளைமாக்ஸ் படப்பிடிப்பில் ராஷ்மிகா உட்பட நடிகர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் படம் முடிவடையும், ”என்று சினிமா வட்தாரங்கள் தெரிவித்தது.

படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

சமீபத்தில் ரஞ்சிதமே ரஞ்சிதமே விஜய் பாடிய வாரிசு பாடல் முழு லிரிக் வீடியோ வெளியானது.இந்த அப்டேடை விஜய் ரசிகர்கள் வைரலாகி கொண்டாடி வருகின்றனர்.பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 15 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது, 1.17 Million லைக்ஸ் பெற்றுள்ளது.

இந்நிலையில் பனையூரில் அலுவலகத்தில் விஜய் அவர்கள் விஜய் மக்கள் இயக்க உறுப்பினரை சந்திக்க வந்துள்ளார் அவரின் வருகையால் ரசிகர்கள் கூடினர். அப்போது காரில் ஏறி சென்ற விஜயை அவரது ரசிகர்களில் ஒருவர் அவரின்கண்ணத்தை பிடிக்க நேர்ந்த போது கோவத்தில் விஜய் கண்ணாடியை முடி வேகமாக காரில் சென்ற வீடியோ தற்போழுது வைரலாகி உள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.