ஏசுவை அவமதித்தாரா விஜய் ஆண்டனி?.. ரோமியோ பத்திரிகையாளர் சந்திப்பில் கிளம்பிய சர்ச்சை!

இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ரோமியோ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஜய் ஆண்டனி, ஃபர்ஸ்ட் லூக் போஸ்டரை பற்றி கேட்ட கேள்ளிவிக்கு பதிலளித்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ரோமியோ பத்திரிகையாளர் சந்திப்பு:

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கி ரவி கிருஷ்ணா, விஜய் நடிப்பில் வெளியான சுக்ரன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்னதாக ஜீவா நடித்து வெளியா டிஷ்யூம் படத்திருக்கு இசையமைத்திருந்தார். சுக்ரன் படம் முன்னதாக ரீலிஸ் ஆனதால் அதுவே அவரது அறிமுக படமானது. அதை தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும், காதலில் விழுந்தேன், நான் அவன் இல்லை, அஆஇஈ, வேட்டைக்காரன், உத்தம புத்திரன் , அங்காடி தெரு போன்ற பல படங்களுக்கு இசையமைத்து பாடியுள்ளார்.

மேலும் நடிப்பிலும் கவனம் செலுத்த தொடங்கிய விஜய் ஆண்டனி நான் படம் மூலம் ஹீராவாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான் போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் எந்த படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அதை தொடர்ந்து வெளியான பிச்சைகாரன் படத்தில் தன் அசாத்தியமான நடிப்பில் தமிழக மக்களை ஈர்த்தார். மேலும் சைத்தான், யமன், காளி, கொலை, ரத்தம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து ஆக்ஷ்ன் த்ரில்லர் படமாக நடித்து வந்த விஜய் ஆண்டனி தற்போது ரொமெண்டிக்காக ரோமியோ படத்தில் நடித்துள்ளார். மிருணாளினி ரவி ஜோடியாக நடித்திருக்கும் இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜீசஸ் குடிக்கலையா?

மேலும், சமீபத்தில் விஜய் ஆண்டனியின் முதல் மகள் மீராவின் இறப்பிற்கு பின் அவர் அதிலிருந்து எப்படி மீண்டு வருவார் என நினைத்துக்கொண்டிருக்கும் போதே அவரது ரத்தம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவரது இரண்டாவது மகளுடன் கலந்துக்கொண்டார்.

ரோமியோ படத்திற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஜய் ஆண்டனியிடம் முதலிரவில் ஹீரோயின் சரக்கடிப்பது போன்ற போஸ்டர் வெளியிடலாமா? சரக்கடிப்பதை ஆதரிக்கிறீங்களா? என்று சிலர் கேட்டதற்கு அவர் நான் சரக்கு அடிக்கலீங்க இவங்க தான் என மிருணாளினி ரவியை மாட்டி விட்டார் பின்னர் ஏன் சரக்கடிச்சிங்க என்று பத்திரிக்கையாளரைப் போல் மிருணாளினியை கேட்க அவர் அதை சாமாளிப்பது போல் பதிலளித்து தப்பித்தார்.

மேலும், விஜய் ஆண்டனி ஏன் ஆண்கள் மட்டும் தான் குடிக்கனுமா பெண்கள் குடிக்க கூடாதா . ஆண்கள் செய்யும் அனைத்து செயலையும் பெண்களும் செய்யலாம். ஏன் ஜீஸஸ் குடிக்கலையா, அப்போவே திராட்சை ரசம் போன்றவற்றில் இருந்து தானே மது வந்தது என பேசியிருப்பது சர்ச்சையை ஏர்படுத்தியுள்ளது. இப்படி கிறிஸ்துவ மதத்தினர் மனம் புண்படும்படி பேசியதற்கு விஜய் ஆண்டனி மன்னிப்பு கேட்க வேண்டும் என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...