ரோமியோ விமர்சனம்!.. விஜய் ஆண்டனிக்கு ஏன் இந்த வேண்டாத வேலை!.. இந்த முறையும் பெரிய பல்பு தான்!..

பேசாம நீ மியூசிக் டைரக்டராகவே இருந்துடு சிவாஜி என விஜய் ஆண்டனி பார்த்து தியேட்டரிலேயே ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டனர். இந்த வாரம் தமிழ் சினிமாவில் இரண்டு இசையமைப்பாளர்கள் நேருக்கு நேர் மோதி மீண்டும் தமிழ் சினிமாவுக்கு கெட்ட பெயரை கேட்காமலே வாங்கி தந்து விட்டனர்.

ரோமியோ விமர்சனம்:

ஒரு பக்கம் வாராவாரம் வந்து ரசிகர்களையும் தமிழ் சினிமாவையும் டார்ச்சர் பண்ணி வரும் டார்லிங் ஜிவி பிரகாஷ் இந்த வாரம் டியர் படத்துடன் வந்து ரசிகர்களை ஐஸ்வர்யா ராஜேஷ் போல தியேட்டரிலேயே குறட்டை விட வைத்துவிட்டார்.

அவருக்கு போட்டியாக ஹீரோவாக நடித்து வரும் இன்னொரு இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி லைவ் கச்சேரிகள் நல்லாத்தானே போய்க்கொண்டிருக்கிறது. எதற்கு தொடர்ந்து நடித்து மொக்கை வாங்க வேண்டும் என்கிற கேள்வி தான் இருக்கிறது.

அறிமுக இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி அறிவழகன் கதாபாத்திரத்தில் ரோமியோ படத்தில் நடித்துள்ளார். மலேசியாவில் வேலை பார்த்து வரும் விஜய் ஆண்டனி தனக்கு 35 வயதாகிவிட்டது சொந்த ஊருக்கு சென்று ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்து தென்காசிக்கு வருகிறார். சினிமாவில் ஹீரோயின் ஆக வேண்டும் என்கிற கனவுடன் இருக்கும் மிருணாளினி ரவி பெற்றோர்கள் டார்ச்சர் காரணமாக திருமணம் செய்து கொள்கிறார்.

திருமணம் செய்து கொண்ட பின்னர் சென்னைக்கு குடி வரும் அவர், தனது கணவரிடம் விவாகரத்து கேட்டு தொல்லை செய்கிறார். தனது மனைவி நடிக்க வேண்டும் என ஆசைப்படுவதை புரிந்து கொள்ளும் விஜய் ஆண்டனி அவருக்காக தானே சொந்தமாக படம் தயாரிக்க முன் வருகிறார். இப்படி ஒரு கணவர் கிடைத்த பின்னர் விவாகரத்து முடிவை மிருனாளினி ரவி கை விட்டாரா? இல்லையா என்பதுதான் ரோமியோ படத்தின் கதை.

படத்தின் திரைக்கதையை ஜவ்வு போல இழுப்பதால் எந்த ஒரு இடத்திலும் சுவாரஸ்யமாகவும் ரசிக்கும் முடியும் படம் இல்லாதது விஜய் ஆண்டனியின் படத்திற்கு தான் மீண்டும் வந்திருக்கிறோம் என்பதை நினைவூட்டுகிறது.

யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் பெயருக்கு காமெடி செய்கிறார்களே தவிர பெரிதாக சிரிக்க வைக்கவில்லை. எடுத்துக்கொண்ட கதையை, திரைக்கதையில் எந்தவொரு ட்விஸ்ட்டும் வைக்காமல் ஒரே நேர்க்கோட்டில் கொண்டு சென்று முடித்திருக்கிறார் இயக்குனர்.

அடுத்து விஜய் ஆண்டனி நடிப்பில் வரும் வள்ளிமயில் படம் எப்படி இருக்கு என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

ரோமியோ – ரொமான்ஸ் இல்லை!

ரேட்டிங் – 2/5.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...