நீங்க நடிச்சா நல்லா இருக்கும்.. ஊரே பாராட்டிய படத்தில் சீமானை நடிக்க வைக்க விரும்பிய வெற்றிமாறன்!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் வெற்றிமாறன். தனுஷ் நடிப்பில் உருவான ‘பொல்லாதவன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன், அதன் பின்னர் இன்று வரை தொட்ட படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆகித் தான் வருகிறது.

பொல்லாதவன் படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் தனுசுடன் ‘ஆடுகளம்’ என்ற திரைப்படத்தில் கைகோர்த்த வெற்றிமாறன் அந்த திரைப்படத்தின் மூலம் ஆறு தேசிய விருதுகளையும் வென்று இருந்தார். இதற்கடுத்து விசாரணை, வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்த வெற்றிமாறன் தனுசுடன் இதுவரை நான்கு படங்களில் பணிபுரிந்துள்ளார்.

மிக மிக முக்கியமான ஒரு கதையை கமர்சியல் ஆகவும் சொல்லி வணிக ரீதியான வெற்றியை பெறுவதில் தேர்ந்தவர் தான் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் கடைசியாக விடுதலை படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் ஒரே பகுதியாக வெளியாக வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் பின்னர் படத்தின் நீளமும் பெரிதாக போக தற்போது இரண்டாம் பாதத்தின் பணிகளும் முடிவடையும் தருவாயில் இருக்கிறது.

விடுதலை 1 மற்றும் 2 என இரண்டு பாகங்களும் சில சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அதிக பாராட்டுகளை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தில் இதுவரை காமெடி கதாபாத்திரங்களில் கலக்கியிருந்த சூரி, முன்னணி நடிகராக நடித்து அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தார். இன்னொரு பக்கம் நடிகர் விஜய் சேதுபதி, வாத்தியார் என்ற கேரக்டரில் முதல் பாகத்தில் நடித்திருந்த நிலையில் அவரது காட்சிகள் மிக குறைவாகவே இருந்தது.

ஆனால் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதிக்கு முன்பாக அந்த வாத்தியார் கதாபாத்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை தான் நடிக்க வைக்க வெற்றிமாறன் முயற்சி செய்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த சீமான், வாத்தியார் கதாபாத்திரத்தில் விடுதலை படத்தில் நடிக்க தன்னை வெற்றிமாறன் அழைத்ததாகவும் ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் அந்த படத்தில் தன்னால் நடிக்க முடியாமல் போனதாகவும் குறிப்பிட்டுள்ளார். அரசியலுக்கு முன்பாக இயக்குனர் மற்றும் நடிகராக இருந்த சீமான் அரசியலில் களமிறங்கிய பின்னர், முழு நேர அரசியல்வாதியாக தான் ஈடுபட்டு வருகிறார்.

அப்படி ஒரு சூழலில் தான், ஒரு வேளை விடுதலை படத்தின் வாத்தியார் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் திரைப்படத்தில் சீமான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.