ஆன்மீகம்

வீரபாண்டிய கட்டபொம்மன் வணங்கிய ஜக்கம்மா- இன்று வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாள்

தூத்துக்குடி மாவட்டத்திற்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாமல் செல்ல வேண்டிய இடம் அருகில் உள்ள பாஞ்சாலங்குறிச்சி.

வெள்ளையர்களை எதிர்த்து ஓடவிட்ட ராமலிங்க விலாசத்தில் ஜாக்சன் துரையை கதறவிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் இங்குதான் தன் படை பரிவாரங்களுடன் ஆட்சி செலுத்தினான்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வம் ஜக்கம்மா. இவர்கள் வழி வந்தவர்கள் குடுகுடுப்பை அடித்து வாக்கு சொல்பவர்களாக பலர் இருந்தனர்.

தற்போது அந்த இனம் குறைந்து விட்டது இருப்பினும் வீரபாண்டிய கட்டபொம்மன் வழி வந்தோர் ஜக்கம்மா சொல்லும் அருள்வாக்கை இன்றும் சொல்லி வருகின்றனர்.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை இடிந்து விட்டது. முந்தைய அரசு அவருக்கு அந்த இடத்தில் மணிமண்டபம் கட்டியுள்ளது.

உள்ளே வீரபாண்டிய கட்டபொம்மன் வணங்கிய ஜக்கம்மா என்ற அவர்களின் குலதெய்வம் கோவில் உள்ளது.

இந்த ஜக்கம்மா தெய்வம்தான் பலருக்கு வாக்கு உரைக்கும் தெய்வமாக இருக்கிறது.

இந்த கோட்டைக்கு சென்றால் வீரபாண்டிய கட்டபொம்மன் வணங்கிய ஜக்கம்மா தேவியின் கோவில் கோட்டைக்குள்ளேயே உள்ளது அங்கு செல்ல மறவாதீர்கள்.

Published by
Abiram A

Recent Posts