வெளிநாடுகளில் தரமாக களமிறங்கும் விடாமுயற்சி! கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!

நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியாக இருந்தது. ஆனால் அந்த படம் சில பிரச்சினைகள் காரணமாக கைவிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். இந்த அறிவிப்பு அஜித்தின் பிறந்தநாள் அன்று அதிகாரப்பூர்வ தகவலாக வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. மே 1-ஆம் தேதி வெளியான இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்த படத்தின் பூஜை மற்றும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என எந்த திட்டவட்டமான அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

மேலும் அஜித் அவர்களின் ஐரோப்பிய சுற்றுப்பயணத்திற்கு பின் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புகள் தொடங்கவில்லை, அதற்கு பதிலாக அஜித் அவர்கள் துபாயில் செட்டிலாக போவதாகவும், லண்டனில் புது வீடு பார்த்துள்ளதாகவும் அதனால் தான் படப்பிடிப்புகள் தள்ளிப்போவதாகவும் பல கிசுகிசுக்கள் வர துவங்கியது. மேலும் இந்த படத்தை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனம் படத்தின் பட்ஜெட் காரணமாக படத்தை நிறுத்தி வைத்துள்ளதாகவும் சில வதந்திகள் வெளியாகி இருந்தது.

ஆனால் உண்மையான தகவல் என்னவென்றால் அஜித் அவர்கள் தனது லண்டன் பயணத்தை முடித்துவிட்டு இயக்குனர் மகிழ் திருமேனியை சந்தித்து விடாமுயற்சி படம் குறித்த முழு கதையையும் கேட்டுள்ளார். மேலும் விடாமுயற்சி திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் படமாக மட்டுமில்லாமல் விஸ்வாசம் போன்று அந்த திரைப்படத்தில் ஃபேமிலி சென்டிமென்ட் காட்சிகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

விடாமுயற்சி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் ஆரோவ், சஞ்சய்தத் போன்ற முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

விஜய் மற்றும் நயன்தாராவுக்கு தங்கச்சி என அதிகமாக தங்கச்சி கதாபாத்திரத்தில் நடித்த சரண்யா மோகன் இப்போது என்ன பண்ணுறாங்க தெரியுமா?

இந்தப் படத்திற்கான காஸ்டியூம் டிசைனர் பொறுப்பை இயக்குனர் மகிழ் திருமேனியிடம் ஒப்படைத்துள்ளார் அஜித். அந்த வகையில் பில்லா படத்தில் அஜித்திற்கு காஸ்டியூம் டிசைனராக இருந்த இயக்குனர் விஷ்ணு வரதனின் மனைவி அனுவரதன் விடாமுயற்சி படத்திற்கு காஸ்டியூம் டிசைனராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் மிக ஸ்டைலான அஜித்தை இந்த படத்தில் பார்க்க முடியும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்

இந்நிலையில் அஜித்தின் விடாமுயற்சி படம் குறித்த மாஸ் அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது. பல நாள் காத்திருப்பிற்கு பின் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நாளை வெளிநாடுகளில் துவங்க உள்ளது. துபாய், அபுதாபி போன்ற வெளிநாடுகளில் 60 சதவீதமான படப்பிடிப்புகள் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

நாளை அதிரடியாக தொடங்கும் விடாமுயற்சியின் படப்பிடிப்பு தொடர்ந்து 50 நாட்கள் ஒரே ஷெடுலாக நடக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் இந்த தகவல்களை தொடர்ந்து நடிகர் அஜித் மற்றும் நடிகை திரிஷா இருவரும் துபாய் ஏர்போர்ட்டில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews