வடிவேலுவின் சகோதரர் படத்தில் நடித்துள்ளாரா…? எந்த படம் தெரியும்…?

வைகைப்புயல் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் என்பவர் சமீபத்தில் காலமான நிலையில் அவர் நடித்த காதல் அழிவதில்லை படம் குறித்து தற்போது பார்ப்போம்.

சிம்பு குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்த நிலையில் அவர் ஹீரோவாக அறிமுகமான படம்  காதல் அழிவதில்லை. இந்த படம் கடந்த 2002ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி வெளியானது.

சிம்பு ஜோடியாக சார்மி நடித்த இந்த படத்தில் டி.ராஜேந்தர் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் வடிவேலுவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படத்தில் தான் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.

வடிவேலு செய்த சூழ்ச்சி.. கடைசி வரை திருமணம் செய்யாத கோவை சரளா..கேள்விப்படாத தகவல்கள்..!

jagadeeswaran1

அதன் பிறகு அவருக்கு வேறு சில படங்களிலும் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் சொத்து பிரச்சனை காரணமாக அவர் ஊரில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஊரில் இருந்து  சொத்து பிரச்சனைகளை கவனித்துக் கொண்டார்.

மேலும் மதுரையில் அவர் ஜவுளி கடை பிசினஸ் நடத்தி வந்ததாகவும் சினிமாவில் வாய்ப்புகள் வந்தபோதிலும் அதை தவிர்த்து விட்டு ஜவுளி பிசினஸில் கவனம் செலுத்தியதாகவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

காலைல வர்ற விடியல் வேற… நைட்டே எனக்கு விடிஞ்சிடுச்சி…! கலகலவென நெகிழ வைத்த வடிவேலு

jagadeeswaran

மேலும் வடிவேலுவுக்கு மூன்று தம்பிகள் மற்றும் இரண்டு தங்கைகள் உள்ளனர். தன் உடன் பிறந்தவர்கள் அனைவரையும் வடிவேலு தான் அங்கு பார்த்துக் கொண்டதாகவும் வீட்டில் எப்போது வந்தாலும் அவர் நகைச்சுவையாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டு இருப்பார் என்றும் ஜெகதீஸ்வரன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மூன்று தம்பிகள் மற்றும் இரண்டு தங்கைகளுக்கும் வடிவேலுதான் தனது சொந்த செலவில் திருமணம் செய்து வைத்ததாகவும் ஜெகதீஸ்வரன் அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

நீ டைரக்டரா? நான் டைரக்டரா? இயக்குனரை கடுப்பேத்திய வடிவேலு – விஜய் படத்தில் நடந்த சலசலப்பு!

காதல் அழிவதில்லை உள்பட இரண்டு படங்களில் மட்டுமே நடித்த ஜெகதீஸ்வரன் திடீரென உடல்நல குறைவு காரணமாக காலமானார். ஜெகதீஸ்வரன் மறைவிற்கு வடிவேலு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். வடிவேலின் சகோதரர் மறைவிற்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...