வடக்குப்பட்டி ராமசாமியோட டைட்டில் முதல்ல இப்படி தான் இருந்ததாம்… கலகலப்பூட்டும் சந்தானம்!

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் வடக்குப்பட்டி ராமசாமி. இதில் சந்தானம் செம கலாய் கலாய்த்து காமெடி தந்து பட்டையைக் கிளப்பி இருக்கிறார். படத்தைப் பார்க்கும்போது இது ஆத்திகத்திற்கு ஆதரவா, நாத்திகத்திற்கு ஆதரவா என்றே தெரியாது. அந்த அளவு அருமையான திரைக்கதையை எழுதியிருக்கிறார் கார்த்திக் யோகி. படம் முழுவதும் கலகலப்பாக செல்கிறது.

சந்தானத்திற்குப் பக்கபலமாக லொள்ளு சபாவில் அவருடன் இணைந்து கலக்கிய மாறன், சேஷ_ ஆகியோர் இணைந்து செம கலாய் கலாய்த்துள்ளனர். மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்தி கல்லா கட்டும் போலி சாமியார்களின் தோலை உரிக்கும் விதத்தில் படம் எடுக்கப்பட்டுள்ளது.

படம் 70களில் நடக்கும் கதை அம்சத்துடன் இருப்பதால் அதற்கேற்ற மேக் அப், உடைகளில் மெனக்கிட்டு இருப்பது தெரிகிறது. அதுவே படத்தை இன்னும் அதிக ரசனையுடன் ரசிக்க வைக்கிறது.
இந்தப்படத்தோட காமெடி எப்படி வந்துருக்கு? படத்துல லவ் சீனே ஏன் இல்லை என்கிற சுவாரஸ்யமான கேள்விகளுக்கு எல்லாம் செம சூப்பராக பதில் சொல்லி இருக்கிறார் சந்தானம். மேலும், இந்தப் படத்தைப் பற்றிய சில கேள்விகளுக்கு சந்தானம் சொன்ன பதில் என்னன்னு பார்க்கலாமா?

VR
VR

முதல்ல தெற்குப்பட்டி தென்ராசுன்னு யோசிச்சி வச்சிருந்தோம். வடக்குப்பட்டில இருந்து அந்த சைடு போனதால அப்படி யோசிச்சோம். ஆனா இப்ப அதை விட வேற ஒரு புராஜெக்ட் போயிக்கிட்டு இருக்கறதால இதை கண்டிப்பா பண்ணுவோம். ஆத்திகரா பார்த்தீங்கன்னா இது ஆத்திகர் படமா தெரியும். நாத்திகரா பார்த்தீங்கன்னா இது நாத்திகர் படமா தெரியும்.

மக்கள் வந்து ரெண்டுமே மிக்ஸடு. எல்லாரும் பார்த்து என்ஜாய் பண்ணனும்கறதுக்காக அப்படி ஒரு கிளைமாக்ஸை படத்துல டைரக்டர் வச்சிருக்காரு. இந்தப்படத்துல வர்ற ஹீரோயினோட (மேகா ஆகாஷ்) காஸ்டியூமையும், ஹேர் ஸ்டைலையும் வேற யாராவது வச்சிருந்தாங்கன்னா நன் படத்துல வர்ற பேய் மாதிரி தான் இருப்பாங்க. ஆனா இவங்க எவ்ளோ பியூட்டிபுல்லா இருக்குறாங்க. ஆனாலும் எந்த லவ் சீனுமே வைக்கல… அதான் டைரக்டர்கிட்ட அடுத்தப்படத்துல கண்டிப்பா லவ் சீனை வச்சிருங்கன்னு சொல்லிருக்கேன்.

காமெடியைப் பொறுத்தவரைக்கும் காதல் காமெடி, பேய் காமெடி, குடும்ப காமெடி எல்லாம் எளிதாக செய்யலாம். ஆனா இது ஒரு சோஷியல் காமெடி பண்றது ரொம்ப கஷ்டம். அதுல ரெண்டு விதமான ஆடியன்ஸ்சுமே இருப்பாங்க. அவங்களை திருப்திப்படுத்தணும். அந்த விதத்துல டைரக்டர் கார்த்தி சூப்பரா பண்ணிருக்காரு.

இவ்வாறு நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.