லியோ, ஜெயிலர், துணிவு திரைப்படங்களை தூக்கி சாப்பிட்ட தனுஷின் 3 திரைப்படம்!

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராக வலம் வரும் தனுஷ் தனது கடினமான உழைப்பு மற்றும் சிறந்த நடிப்பின் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தி புகழின் உச்சியில் உள்ளார். கடந்த சில வருடங்களாக தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் வாத்தி போன்ற திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சாதனையை படைத்து வந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக உள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த திரைப்படம் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் தனது ஐம்பதாவது திரைப்படத்தில் பிஸியாக நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகும் ராயன் என தற்சமயம் டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை தனுஷ் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகராக வெற்றிக்கொடி நாட்டி வந்த தனுஷ் தற்பொழுது ஹீரோவாக மட்டுமல்லாமல் இயக்குனராக படங்களை இயக்குவதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ராயன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அவரின் அக்கா மகனை ஹீரோவாக வைத்து ஓர் படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் சமீபத்திய தகவல் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் கதாநாயகியாக என்னை அறிந்தால் குழந்தை நட்சத்திரமான அனிகா சுரேந்திரன் நடிக்க உள்ளார்.

அடுத்தடுத்து நடிப்பிலும் இயக்கத்திலும் பிசியாக இருக்கும் தனுஷின் திரைப்படங்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு சான்றாக சமீபத்தில் தனுஷ் நடிப்பில் 11 வருடங்களுக்கு முன்னதாக வெளியான படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 3 திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்துள்ளது. இந்த படத்தின் மூலமாக தான் அனிருத் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்திருந்தார். மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வை திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் வைரலாகி ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பாடல்களுக்கு கிடைத்த வெற்றிக்கு எதிர்மறையாக படத்தின் வசூல் குறிப்பிடும் வகையில் அமையவில்லை.

மற்ற ஹீரோக்களுடன் போட்டி போடாமல் நேரடியாக இயக்குனரை தாக்கிய அயலான் படக்குழு!

மேலும் இந்த திரைப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் தனுஷின் 3 திரைப்படம் தெலுங்கில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய வசூல் சாதனையை எட்டியது. அதை தொடர்ந்து தமிழிலும் இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள 3 திரைப்படம் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதாவது சென்னை கமலா தியேட்டரில் தனுஷின் 3 திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு தற்பொழுது பட்டையை கிளப்பி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் கமலா தியேட்டரின் உரிமையாளர் 3 திரைப்படம் குறித்து ட்விட்டர் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த ஆண்டு நேரடியாக வெளியான மிகப்பெரிய ஹீரோக்களில் சூப்பர் ஹிட் திரைப்படங்களை விட தனுஷின் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள 3 திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருவதாக கூறியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் டிக்கெட் 50 ஆக இருந்து வருவதால் ரசிகர்கள் கூட்டம் அலை மோதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக 3 திரைப்படம் வெளியாகி 11 ஆண்டுகளை கடந்த நிலையில் ரசிகர்களிடையே இந்த திரைப்படம் மீண்டும் நல்ல ஆதரவை பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.