இப்படியா வரிகள் எழுதுவீங்க.. பெண்ணை பற்றி வாலி எழுதிய பாடல்.. பிடிவாதமாய் இருந்து வெற்றி கண்ட கவிஞர்..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவராக இருந்தவர் கவிஞர் வாலி. சுமார் 55 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பாடலாசிரியர் மற்றும் கதாசிரியராக இருந்த வாலி, பல தலைமுறை இசையமைப்பாளர்கள் மற்றும் கலைஞர்களுடன் இணைந்து ஏராளமான படைப்புகளை ரசிகர்களுக்காக கொடுத்துள்ளார்.

விஸ்வநாதன் – ராமமூர்த்தி, எம். எஸ். விஸ்வநாதன், இளையராஜா தொடங்கி ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, இமான், அனிருத், ஜஸ்டின் பிரபாகரன் உள்ளிட்ட இந்த காலத்து இளம் இசையமைப்பாளர்கள் வரை இணைந்து பணிபுரிந்துள்ளார் வாலி. எந்த காலத்திற்கு தேவையான பாடலாகா இருந்தாலும் ட்ரெண்டிற்கேற்ப தன்னை அதற்குள் முழுமையாக நிரப்பி கொண்டு காலம் கடந்து நிற்கும் வகையில் பாடலை கொடுப்பதில் வாலி வல்லவர்.

பல தலைமுறைகளாக சிறந்த காவியங்களை கொடுத்த வாலி, கடந்த 2013 ஆம் ஆண்டு தனது 81 வது வயதில் காலமானார். உடலால் மறைந்து போனாலும் அவரது பாடல்கள் என்றும் இந்த மண்ணில் ஒலித்து கொண்டே தான் இருக்கும். இதற்கிடையில், சர்ச்சையாகும் வகையில் வாலி எழுதிய பாடல் ஒன்றை பற்றி பார்க்கலாம்.

ரவிச்சந்திரன், நாகேஷ், அசோகன், காஞ்சனா உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் அதே கண்கள். இந்த திரைப்படத்தை திருலோக்சந்தர் இயக்கி இருந்த நிலையில், வேதா இசையமைத்திருந்தார். அனைத்து பாடல்களையும் வாலி எழுதி இருந்த நிலையில், ‘ஓ ஓ எத்தனை அழகு 20 வயதினிலே’ என பெண்ணை குறிக்கும் பாடலும் இந்த படத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த பாடலின் வரிகளை வாலி எழுதி முடித்த பிறகு, அந்த பாடலின் வரியே பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

பொதுவாக 16 வயதினிலே தான் பெண்களை அழகு என்பார்கள். ஆனால், 20 வயது என வாலி குறிப்பிட்டது நிச்சயம் விமர்சனத்துக்கு உள்ளாகும் என்றும் பலரும் சிரிக்க போகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கு விளக்கம் கொடுத்த வாலி, ‘பெண்கள் 16 வயதில் பருவம் ஆனாலும் அவர்கள் குழந்தைகள் போல தான். 20 வயதாகும் போது தான் அவர்களுக்கான உடலமைப்பு மாற்றம் வரும். அதனால் இந்த வரி தான் சரி. அப்படி யாராவது இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதன் பின்னர் வேண்டுமானால் நீங்கள் பாடல் வரிகளை மாற்றிக் கொள்ளுங்கள்’ என தெரிவித்துள்ளர்.

ஆனால், வாலி எழுதிய இந்த வரிகள் சர்ச்சையில் சிக்காமல் காலம் கடந்த எவர்க்ரீன் பாடலாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.