மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்!.. ஃபர்ஸ்ட் லுக் எப்போ வருது தெரியுமா?.. விக்ரம் ட்வீட்!..

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து வரும் கபடி சம்பந்தமான படத்தின் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது முதல்முறையாக அந்த படம் தொடர்பான அப்டேட்டை சீயான் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்:

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் மாறி செல்வராஜ். முதல் படத்திலேயே கதிர் மற்றும் கயல் ஆனந்தியை நல்ல கதை அம்சம் கொண்ட படத்தை இயக்கி ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றார்.

GMvU8iFXUAAnc3a

அந்தப் படத்தை தொடர்ந்து தனுஷை வைத்து அவர் இயக்கிய கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறியது. பரியேறும் பெருமாள் படத்தில் கத்தியை தூக்காத மாரி செல்வராஜ் கர்ணன் படத்தில் போலீஸ் கழுத்தை அறுக்கும் காட்சிகள் பதைபதைக்க வைத்தன. மேலும், பா ரஞ்சித் வரிசையில் அவரும் சாதியப் படங்களை எடுக்க ஆரம்பித்து விட்டார் என்கிற விமர்சனங்கள் எழுந்தன.

கடந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்திலும் சாதி மற்றும் அரசியல் கலந்திருந்த நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

மாரி செல்வராஜ் படங்கள் தொடர்ந்து கிராஃப்ட் ஆக சிறப்பாக இருப்பதாக பலரும் பாராட்டி வரும் நிலையில், அவரது கதை அம்சம் அனைத்து ரசிகர்களையும் கவரும் விதமாக இல்லை என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், அடுத்ததாக துருவ் விக்ரம் நடிப்பில் உருவாக உள்ள கபடி படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். அந்த படம் தொடர்பான அறிவிப்பு மே 6-ஆம் தேதி வருகிறது என சியான் விக்ரம் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக சித்தா இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் சியான் விக்ரம் நடித்து வருகிறார்.

அப்பா சியான் விக்ரம் பா. ரஞ்சித் படத்திலும் மகன் துருவ் விக்ரம் மாரி செல்வராஜ் படத்திலும் நடித்து வரும் நிலையில், இந்த ஆண்டு யார் விருதுகளை அள்ளப் போகிறார் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...