அர்த்தமே இல்லாமல் வந்த தமிழ் பாடல்கள் : அதுவும் ஹிட் லிஸ்ட்டில் என்னென்ன தெரியுமா?

தமிழ்த் திரையுலகில் அர்த்தமே இல்லாமல் வந்த பாடல்கள் ஏராளம். என்னதான் இசைக்கு கண்ணில்லை என்றாலும் நம் இசையமைப்பாளர்கள் போட்ட இசைக்கு வரிகளே இல்லாமல் ஹிட் அடித்த வரலாறும் உண்டு. தமிழில் செய்யுளின் ஓசையை நிறைவு செய்யவும், அதன் அழகை இன்னும் கூட்டவும் கவிஞர்கள் சில வார்த்தைகளை பயன்படுத்துவர். அந்த வகையில் சில பாடல்களைப் பார்ப்போம்.

காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற பெட்டராப் பாடல். பிரபுதேவா, வடிவேலு, நக்மா நடித்த இப்பாடலில் இடம்பெறும் பெட்டராப் என்ற வசனத்திற்கு இப்போது வரை அர்த்தமே இல்லை. இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்குத் தான் தெரியும் இதன் அர்த்தம். இப்பாடலை எழுதியது டைரக்டர் ஷங்கர் என்பது பலரும் அறியாத தகவல்.

அடுத்ததாக நம் லிஸ்ட்-ல் சேர்பவர் விஜய் ஆண்டனி. தற்போது நடிப்பில் கவனம் செலுத்தினாலும் இவர் இசையில் அமைந்த பல பாடல்களின் ஆரம்ப மெட்டுக்களுக்கு அர்த்தமே இருக்காது. அதிலும் தமிழ்ப்படம் என்ற திரைப்படத்தில் உருவான ஓ மகசீயா பாடலுக்கு இவர் அமைத்த மெட்டு இசை ரசிகர்களையும், விமர்சகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. எல்லாப் புகழ்பெற்ற பாடல்களிலிருந்தும் எடுக்கப்பட்ட வார்த்தைகளால் இயற்றப்பட்ட பாடல் இது. இந்தப் பாடலுக்கு எந்த அர்த்தமும் இல்லை. நாக்க முக்க பாடல், அலேக்ரா பாடல், டைலாமோ டைலாமோ, உசுமலரசே என இவரின் லிஸ்ட் அதிகம்.

தினத்தந்தியில் வந்த விளம்பரத்தால் புகழின் உச்சத்திற்குப் போன நடிகர் இவரா?

அடுத்ததாக ஹாரீஸ் ஜெயராஜ்

நண்பன் படத்தில் இடம்பெற்ற அஸ்கு அஸ்கு பாடலைச் சொல்லலாம். மேலும் காக்க காக்க ஓமகசீயா பாடல்களும் அடங்கும். இப்பாடல்களின் முதல் மெட்டு எந்த மொழியில் உருவானது என்று தெரியவில்லை.

இசைஞானி கொண்டு வந்த லாலா வரிசை

இசைஞானி இளையராஜாவின் இசையில் லாலா வரிசையில் இடம் பெற்ற பாடல்கள் மிக அதிகம். மெகாஹிட் ஆன சின்ன சின்ன வண்ணக் குயில் முதல் மெட்டு லலலலா என்று தொடங்கும்.

மேலும் தேவா இசையில் சூரியன் படத்தில் இடம்பெற்ற லாலாக்கு டோல் டப்பிமா பாடலுக்கும் அர்த்தம் இல்லை. இவ்வாறு தமிழ்த் திரையுலகில்அர்த்தம் இல்லாமல் இடம்பெற்ற பாடல்களின் லிஸ்ட் அதிகம்.  இதேபோன்று பாடல்கள் உங்களுக்குத் தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க..

 

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews