விற்பனைக்கு வந்த டிவிஎஸ் வளாகம்.. போட்டா போட்டி போடும் முன்னணி நிறுவனங்கள்.. என்னது இத்தனை கோடியா?

டிவிஎஸ் குழுமத்தின் சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்யும் அறிவிப்பு வெளியான நிலையில் முன்னணி நிறுவனங்கள் அதனை வாங்க போட்டா போட்டி போட்டு வருகின்றன.

சென்னை அண்ணா நகரில் டிவிஎஸ் குழுமத்தின் சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனமானது 2.14 லட்சம் சதுர அடியில் இந்த நிறுவனம் உள்ளது.

இந்த நிறுவன வளாகத்தில் கார் விற்பனை நிலையத்துடன் சர்வீஸ் சென்டர்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவன வளாகத்தை விற்பனை செய்ய உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.

அண்ணா நகரின் மெயின் பகுதியில் உள்ள இந்த நிறுவனத்தை வாங்க ப்ரஸ்டிஜ், பூர்வங்கரா, எம்பஸி போன்ற நிறுவனங்கள் வாங்க முனைப்புக் காட்டி வருகின்றன.

இந்த மூன்று நிறுவனங்களில் ப்ரஜ்டிஜ் கூடுதல் தொகையாக 600 கோடி கொடுத்து வாங்க முன் வந்துள்ளது. இதனால் ப்ரஜ்டிஜிக்குத் தான் சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவன வளாகம் கிடைக்கும் என்று தெரிகின்றது.

இருப்பினும் சுந்தரம் மோட்டார்ஸ் தரப்பில் இன்னும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.