டாப் ஸ்டார் பிரசாந்த் தவற விட்டு தல அஜித் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படங்கள்!

இன்றைய தமிழ் சினிமாவின் போட்டியின் நடிகர்களாக அஜித் மற்றும் விஜய் முதல் இடத்தில் உள்ளனர். ஆனால் இந்த இரண்டு சூப்பர் ஹீரோக்களுக்கு முன்னதாகவே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்த ஒரு நடிகர் தான் டாப் ஸ்டார் பிரசாந்த். நடிகர் பிரசாந்த் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் தியேட்டர்களில் ஒரு வருடங்களுக்கு மேலாக ஓடி மெகா ஹிட் வெற்றியைப் பெற்றது. அதே நேரத்தில் நடிகர் அஜித்தின் முதல் படமான அமராவதியும் தளபதி விஜயின் முதல் படமான நாளைய தீர்ப்பு திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த நடிகர் பிரசாந்த் மற்றும் தளபதி விஜய்யின் 20க்கு மேற்பட்ட திரைப்படங்கள் நேருக்கு நேராக மோதியுள்ளது. அதே நேரத்தில் நடிகர் பிரசாந்த் வேண்டாம் என மறுத்த சில கதைகளில் நடிகர் அஜித் நடித்து அந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது.

அந்த வகையில் நாம் முதலில் பார்க்கும் திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். ராஜுவ் மேனன் இயக்கத்தில் 2000ல் வெளியான இந்த திரைப்படம் நடிகர் அஜித்திற்கு மிகப்பெரிய ஹிட் திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தில் நடிகர் அஜித் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரசாந்த் அவர்கள்தான். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை தபு இணைந்து நடித்திருப்பார். நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அப்பாஸிற்கு ஜோடியாக நடித்திருப்பார்.

அடுத்ததாக நாம் பார்க்கும் திரைப்படம் ஆனந்த பூங்காற்றே. 1999 ஆம் ஆண்டு ராஜ்கபூர் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் அஜித் நடித்திருப்பார். அஜித்திற்கு ஜோடியாக நடிகை மீனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்தி மற்றும் மாளவிகா இணைந்து நடித்திருப்பார்கள். இந்த படத்தின் பூஜையின் போது நடிகர் அஜித்திற்கு முதுகில் ஏற்பட்ட ஒரு பாதிப்பின் காரணமாக சிகிச்சையில் இருந்தார். அவர் மீண்டு வருவது கடினம் என நினைத்த படக்குழு படத்தில் பிரசாந்த் மற்றும் கார்த்திக் இணைந்து நடிக்க இருப்பதாக பூஜையை தொடங்கியது. அதன் பின் தன் உடல் நிலையை சரி செய்து பழைய நிலைக்கு திரும்பிய அஜித் தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி ஆனந்த பூங்காற்றே படத்தில் நடித்தார். இந்த படமும் அஜித்திற்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது.

திருமணத்திற்கு தயாரான அஜித் பட இயக்குனர்! மணப்பெண் யாரு தெரியுமா?

இந்த நிலையில் அஜித்தின் திரை உலகில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தீனா. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா திரைப்படத்தில் நடிகர் அஜித் ஒரு ரவுடி இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் இந்த படத்தின் கதை முதலில் நடிகர் பிரசாந்தை மனதில் வைத்து தான் எழுதியதாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஜீன்ஸ், கண்ணதிரே தோன்றினாள், காதல் கடிதம், காதல் கவிதை போன்ற படங்களில் சாக்லேட் பாயாக நடித்து வந்த நடிகர் பிரசாந்த் தீனா படத்தில் கரடு முரடான கதாபாத்திரத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்ற கருத்தை மனதில் வைத்து தான் ஏ ஆர் முருகதாஸ் தீனா படத்தின் கதையை எழுதியுள்ளார்.

இயக்குனர் முருகதாஸ் நடிகர் பிரசாந்தை சந்தித்து இந்த கதையை கூறியுள்ளார். அவர் வேண்டாம் என மறுக்கவும், இயக்குனர் எஸ் ஜே சூர்யா உதவியுடன் நடிகர் அஜித்தை சந்தித்து இந்த படத்தின் கதையை கூறியுள்ளார் அதன்பின் அஜித் சம்மதத்துடன் இந்த திரைப்படம் வெளியாகி அஜித்தின் திரை வாழ்க்கைக்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews