திருமணத்திற்கு தயாரான அஜித் பட இயக்குனர்! மணப்பெண் யாரு தெரியுமா?

நடிகர் அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தனது 62 ஆவது திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்கத்தில் இணைந்து நடிக்க உள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு மே ஒன்றாம் தேதி அஜித் பிறந்தநாள் அன்று மிகப் பிரம்மாண்டமாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து படப்பிடிப்பு குறித்து எந்த அறிவிப்புகளும் வெளியாகாமல் இருந்தது.

அஜித்தின் பைக் டூர், தயாரிப்பு நிறுவனத்தின் காலதாமதம் என படப்பிடிப்பு குறித்து எந்த தகவலும் வெளிவராத நிலையில் கடந்த மாதம் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகள் ஐரோப்பிய நாடான அஜர்பைஜானில் பிரம்மாண்டமாக துவங்கியது. அதைத் தொடர்ந்து துபாயில் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகை திரிஷா நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் பிக் பாஸ் புகழ் ஆரவ் கலந்து கொண்ட நிலையில் அவர்களுக்கான காட்சிகள் மிக சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அஜர்பைஜானில் தற்பொழுது மணல் புயல் காரணமாக படப்பிடிப்புக்கு சிறிது நாள் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து சென்ற வாரம் விடாமுயற்சி படக்குழு சென்னை திரும்பியது. சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் இந்த படக்குழு அஜர்பாய்ஜானில் தொடர்ந்து தன் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் அஜித் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் பில்லா போன்ற படங்களைப் போன்ற மிக ஸ்டைலான அஜித்தை இந்த படத்தில் பார்க்க முடியும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நேரத்தில் நடிகர் அஜித் தனது படக்குழு இடம் ஓர் அன்பு கட்டளை விடுத்துள்ளார்.

விடாமுயற்சி படம் எடுத்து முடிக்கும் வரை எந்த அப்டேட்டுகளும் வெளியாகாத வண்ணம் படத்தை ரகசியமாகவும், பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும், அப்பொழுது தான் தனது ரசிகர்களுக்கு இந்த படம் ஓர் இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என கூறியுள்ளார். அதை உறுதி செய்யும் பட்சத்தில் இந்த படத்தின் கதை மற்றும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் அப்டேட்டுகள் இதுவரை வெளியாகாத வண்ணம் படக்குழு ரகசியத்தை பாதுகாத்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அல்லது நடிகர் அஜித்தின் பிறந்தநாள் மே ஒன்றாம் தேதி வெளியிட தயாராக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் தனது 63 வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். திரிஷா அல்லது நயன்தாரா என்ற காமெடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆதிக் இயக்கத்தில் சமீபத்தில் விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்துடன் இணைந்து மேற்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டாருடன் இணையும் சிவகார்த்திகேயன்! தலைவர் 171 படத்தின் வேற லெவல் அப்டேட்!

அப்போது நடிகர் அஜித்துடன் ஏற்பட்ட நட்புறவு காரணமாக அஜித்தை சந்தித்து ஒரு கதையை கூறி அந்தப் படத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார். மேலும் அஜித்தின் இந்த 63வது திரைப்படத்தை பிரம்மாண்ட தெலுங்கு தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சமீபத்திய தகவல் வெளியாகி உள்ளது.

அஜித் படம் ஓகே ஆன அதே நேரத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அடுத்த மாதம் மிக பிரமாண்டமாக திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி பலம்பெரும் நடிகர் பிரபு அவர்களின் மகளிருக்கும் இயக்குனர் மற்றும் நடிகரான ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அடுத்த மாதம் டிசம்பர் 15ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற உள்ளதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் இந்த திருமணம் ஒரு காதல் திருமணம் என்றும் அதன் பின் பெற்றோர்கள் சம்மதத்தால் முறைப்படி திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.