டாப் ஹீரோக்கள் நடிக்க மறுத்த கதை… ராஜ்கிரண் நடித்து ஹிட்டான என் ராசாவின் மனசிலே!

சினிமா ஆசையே இல்லாமல், பிழைப்பதற்காக சென்னை வந்தவர் கஸ்தூரி ராஜா. ஆனால் காலம் அவரை இயக்குனராக்கி இருக்கிறது. அவரது குடும்பத்தில் உள்ள அனைவருமே இப்போது சினிமா துறையில் இயங்குகிறார்கள்.

கஸ்தூரிராஜாவின் மகன்களில், ஒரு மகன் சிறந்த இயக்குனர் மற்றொருவர் சிறந்த நடிகர்.  இதற்கு எல்லாம் தொடக்க புள்ளி கஸ்தூரி ராஜா ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராக சேர்ந்து வேலை பார்த்திருக்கிறார்.

அங்கு சினிமா துறை சார்ந்த ஒருவரின் நட்பு கிடைக்கவே அங்கிருந்து தொடங்குகிறது கஸ்தூரி ராஜாவின் பயணம். பின் ஒரு கட்டத்தில் இயக்குனர் விசுவிடம் உதவி இயக்குனராக பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது. தொடர்ந்து பல படங்கள் அவரிடமே பணியாற்றி கொண்டிருந்திருக்கிறார்.

அந்த சமயத்தில், பத்திரிக்கையாளர் ஒருவர் விசுவிடம், பாரதிராஜாவின் உதவி இயக்குனர்கள் எல்லாரும் இயக்குனர்கள் ஆகி விட்டார்கள். உங்களுடைய இயக்குனர்கள் இன்னும் அசிஸ்டென்களாகவே இருக்கிறார்களே என்று கேட்டிருக்கிறார்.

இதனை சிந்தித்து பார்த்த விசு, உதவி இயக்குனராக பணிபுரிந்த டிபி கஜேந்திரன் மற்றும் கஸ்தூரி ராஜாவிடம் நீங்கள் இனி உதவி இயக்குனராக இருக்க வேண்டாம். படம் எடுக்க தயாராகுங்கள் ஆளுக்கு ஒரு படம் நான் தயாரிக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

டிபி கஜேந்திரன் இயக்குனராகும் முயற்சியில் இறங்கி விட்டார். ஆனால், கஸ்தூரி ராஜா உதவி இயக்குனராகவே தொடர்ந்திருக்கிறார். கதை எழுவதையும் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார். என் ராசாவின் மனசிலே கதையை சத்யராஜ், விஜயகாந்த் என பலருக்கும் சொல்லி இருக்கிறார்.

பின் ராமராஜனிடம் அந்த கதை போயிருக்கிறது. ராமராஜன் தான் ராஜ் கிரணிடம் கதையை சொல்லுங்கள் அவர்தான் படம் தயாரிக்கிறார் என்று சொல்லவே உடனே ராஜ் கிரணை சந்தித்திருக்கிறார். கஸ்தூரி ராஜா தன்னுடைய படத்தை தயாரிப்பதற்கே ராஜ் கிரணை அணுகி இருக்கிறார்.

அவருக்கும் அந்த கதை பிடித்து போக தயாரிப்பதற்கு சம்மதித்து விட்டார். தொடர்ந்து பல ஹீரோக்கள் இந்த கதையை மறுக்கவே ராஜ் கிரணே களத்தில் இறங்கி மாயாண்டியாக என் ராசவின் மனசிலே படத்தில் வாழ்ந்துவிட்டார். மீனா, வடிவேலு என பலர் இந்த படத்தில் நடித்திருப்பார்கள்.

கிராமத்து கதை மண் மனம் வீசும் வகையில் படமாக்கி வெற்றியடைந்தார் இயக்குனர் கஸ்தூரி ராஜா. என் ராசவின் மனசிலே படத்திற்கு ராமராஜனை விட ராஜ் கிரணே சரியான தேர்வு என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த படத்திற்கு மற்றொரு பக்க பலம் இளையராஜவின் இசையாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...