இந்தப் பாடலில் ரொம்ப என்ஜாய் பண்ணி நடித்தேன்… மாளவிகா பகிர்வு…

ஸ்வேதா கோனூர் மேனன் என்ற இயற்பெயரைக் கொண்ட மாளவிகா எண்ட் லவ்லி மாடல் அழகியாக இருந்து பின்னர் நடிகையானவர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். 1999 ஆம் ஆண்டு சுந்தர். சி இயக்கத்தில் வெளியான ‘உன்னைத் தேடி’ திரைப்படத்தில் அஜித்குமாருடன் இணைத்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மாளவிகா நடித்த முதல் திரைப்படமே வெற்றித் திரைப்படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ‘ஆனந்த பூங்காற்றே’, ‘ரோஜா வனம்’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘பேரழகன்’, ‘சந்திரமுகி’, ‘திருட்டு பயலே’, ‘வியாபாரி’, ‘திருமகன்’, ‘நான் அவன் இல்லை’, ‘குருவி’, ‘ஆயுதம் செய்வோம்’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இது தவிர தனி பாடல்களிலும் நடனமாடியுள்ளார் மாளவிகா. ‘வெற்றி கொடி கட்டு’ திரைப்படத்தில் இவர் நடனமாடியிருந்த ‘கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு’ என்ற பாடல் அந்த நேரத்தில் பட்டி தொட்டி எங்கும் பரவி மாபெரும் ஹிட்டானது.

அதே போல் மாளவிகா நடனமாடிய மற்றொரு பாடலான ‘வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்’ என்ற பாடலும் அதிரடி ஹிட்டானது. கிளாமரையும் கண்ணியமான முறையில் வெளிக்காட்டியவர் மாளவிகா. அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து பெயர் பெற்றவர்

இந்நிலையில், தற்போது நேர்காணனில் கலந்துக் கொண்ட மாளவிகாவிடம் நீங்கள் ரசித்து மகிழ்ந்து பணியாற்றிய பாடல் எது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ‘வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்’ பாடலில் நடிக்கும் போது ரொம்ப ஜாலியாக இருந்தது, என்ஜாய் பண்ணி நடமாடினேன் என்று பதிலளித்தார் மாளவிகா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...