தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.200 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்று மீண்டும் ஒரு சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம் விலை கடந்த நான்காம் தேதி 46 ஆயிரம் என ஒரு சவரன் விற்பனையானது. அதற்கு அடுத்த நாள் அதாவது மே 5ஆம் தேதி 46,200 என விற்பனையானது. இதனை அடுத்து திடீரென தங்கம் விலை திடீரென வீழ்ச்சி அடைந்தது என்பதும் அதன் பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சென்னையில் தங்கம் விலை நேற்றைய விட இன்று ஒரு கிராமுக்கு 25 ரூபாயும் ஒரு சவரனுக்கு 200 ரூபாயும் உயர்ந்து விற்பனையாகி வருகிறது. வெள்ளி ஒரு கிலோவுக்கு 200 ரூபாய் அதிகமாக விற்பனையாகி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று ஆபரண தஙக்ம் ஒரு கிராம் தங்கம் விலை 5742 என்றும் ஒரு சவரன் தங்கம் விலை 45 ஆயிரத்து 936 என்றும் விற்பனை ஆகி வருகிறது. அதேபோல் 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 6212 என்ன விற்பனை ஆகி வருகிறது. வெள்ளி விலை ஒரு கிலோ 82,700 என விற்பனையாகி வருகிறது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் திருமணம் சீசன் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் தங்கம் விலை ஏறிக்கொண்டே இருப்பது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இப்போதைக்கு தங்கம் பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை என்றும் பெரிய அளவில் உயரும் முன் தற்போதாவது தங்கத்தை வாங்கி சேமித்து கொள்ள வேண்டும் என்றும் தங்க நகை முதலீட்டு ஆலோசகர்கள் கூறுகின்றனர். தங்கம் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்து வருவதால் இந்தியாவிலும் வருங்காலத்தில் தங்கம் விலை உயரும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews