மகன் பிரசாந்தின் பிறந்தநாள் பரிசாக ரூ. 1.5 கோடி மதிப்புள்ள BMW காரை வழங்கிய தியாகராஜன்… ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியை சொன்ன பிரசாந்த்…

தியாகராஜன் ஒரு பழம்பெரும் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடா, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் இவர் நடித்த ‘மலையூர் மம்பட்டியான்’ திரைப்படம் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. அதன் பிறகு பல படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். இவர் நடிகர் பிரசாந்தின் தந்தையும் நடிகர் விக்ரமின் தாய் மாமாவும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தியாகராஜனின் மகனான நடிகர் பிரசாந்த் 90 களின் பிற்பகுதியில் தென்னிந்தியாவின் பிரபலமான முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தார். 1990 ஆம் ஆண்டு தனது 17 வது வயதிலேயே ‘வைகாசி பொறந்தாச்சு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘பார்த்தேன் ரசித்தேன்’, ‘ஜோடி’, ‘பூமகள் ஊர்வலம்’ போன்ற அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக கலக்கி கொண்டிருந்தவர்.

1998 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கிய ‘ஜீன்ஸ்’ திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். இந்த படம் மட்டுமல்லாது இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சேர்ந்து மெகாஹிட் ஆனது. இந்த ‘ஜீன்ஸ’ திரைப்படம் நடிகர் பிரசாந்தை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றது. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிலும் நடித்திருந்தார்.

2000 த்தின் நடுப்பகுதிக்கு பின்பு எந்த படமும் நடிகர் பிரசாந்த்திற்கு எந்த படமும் பெரிதாக கை கொடுக்கவில்லை. சினிமாவில் இருந்து சற்று இடைவேளை எடுத்துக் கொண்ட பிரசாந்த் தற்போது சில ஆண்டுகளாக சில படங்களில் துணை வேடத்திலும் கெஸ்ட் ரோலிலும் நடித்து வந்தார். இது அவரது ரசிகர்களை வருத்தமடைய செய்தது. அவரை ஹீரோவாகவே அவரது ரசிகர்கள் பார்க்க விரும்பினர்.

இந்நிலையில் தற்போது நடிகர் பிரசாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தந்தை ரூ. 1.5 கோடி மதிப்புள்ள BMW காரை பரிசளித்துள்ளார். அதை தொடர்ந்த நேர்காணலில் தனது ரசிகர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால், நான் என் ரசிகர்களை கடவுளுக்கு இணையாக மதிப்பேன், அவர்கள் என்னை திரையில் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதை நான் அறிவேன், நான் தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு வருகிறேன், சிலவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறேன், விரைவில் என்னை வெள்ளித்திரையில் தொடர்ந்து பார்க்கலாம். நானும் அவர்களை சந்திக்க ஆவலாக உள்ளேன், மேலும் என் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி என்று கூறியுள்ளார் சாக்லேட் பாய் பிரசாந்த்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...