படுத்த படுக்கையில் இருப்பவர்களையும் துள்ளி குதிக்க செய்யும் அற்புத மருத்து என்னென்று தெரியுமா?

பொதுவாக உடல் பலகீனமாக இருப்பவர்கள் மற்றும் குழந்தை பெற்ற பாலூட்டும் தாய்மார்கள் அதிகம் தன் உணவில் சேர்க்க வேண்டிய ஒன்று சுவரொட்டி தான். ஆடு மண்ணீரலை தான் நம் தமிழில் சுவரொட்டி என்று கூறுகிறோம். சுவரொட்டி என்றால் இதை சுவற்றில் அடிக்கும் பொழுது ஒட்டிக் கொள்ளுமாம் அதனால் அந்த பெயர் வந்தது.

இந்த சுவரொட்டிகளில் அமினோ அமிலங்கள், பி 12 மற்றும் தாதுக்கள் மிக அதிகமாக உள்ளது . இதில் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சி இரண்டும் அதிகமாக இருப்பதால் அதில் உள்ள இரும்புச்சத்து உடலுக்கு நன்மை தருவதாக கூறப்படுகிறது.

இது குறைந்த ஹிமோகுளோபினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவரொட்டி இரும்பு சத்தாக பரிந்துரைக்கப்படுகிறது. மண்ணீரலில் வெறும் 50 கிராம் நமது தினசரி இரும்பு சத்து தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த சுவரொட்டி தமிழ்நாட்டில் மட்டும் இன்றி தென்னிந்திய உணவு வகைகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

இத்தனை சிறப்பு மிக்க சுவரொட்டி ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கவும் ரத்த சோகை வராமல் தடுக்கவும் பயன்படுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கி தீங்கு விளைவிக்கும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் தன்மை கொண்டது.

விஜய்யின் துப்பாக்கி, சர்கார் படங்களை தொடர்ந்து லியோ படத்திற்கும் எச்சரிக்கை கொடுத்த பசுமை தாயகம்!

நீண்ட நாட்களாக தீராத நோயினால் பாதிக்கப்பட்டு அதற்காக அதிக மருந்துகள் சாப்பிட்டு வருபவர்களையும் இது வலுப்பெற செய்ய கூடியது. மேலும் பெருங்குடல் வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவுவதாகவும் கூறப்படுகிறது.

இது மட்டும் அல்லாமல் முடக்கு வாதம், சிறுநீரக சிக்கல் போன்ற நோய்க்கும் சுவரொட்டி சிறந்த தீர்வாக அமைகிறது.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews