விஜய்யின் துப்பாக்கி, சர்கார் படங்களை தொடர்ந்து லியோ படத்திற்கும் எச்சரிக்கை கொடுத்த பசுமை தாயகம்!

பொதுவாக விஜய் படங்கள் என்றாலே சர்ச்சைகள் வரிசையாக நிற்பது புதிதல்ல. அந்த வரிசையில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவரது 67ஆவது படமான லியோ படத்தின் பிரமோஷன் பணிகளை தற்பொழுது பட குழு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன் ஒரு பகுதியாக விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி லியோ படத்தின் முதல் பாடல் ALTER EGO NAA READY வெளியாக உள்ளது. இந்த பாடலுக்கான ப்ரோமோ நேற்று வெளியானது. இந்த அறிவிப்புடன் சேர்த்து ஒரு போஸ்டரும் வெளியானது. இதில் விஜய் வாயில் சிகரெட் வைத்திருப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

இதனை கண்டித்து பசுமை தாயகம் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சிகரெட் நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களையே கொலை செய்து வருகின்றனர். அப்படி பட்ட சிகரெட்டை முன்னணி நடிகர்கள் விளம்பர படுத்துவது போன்ற காட்சிகள் சமூகத்திற்கு தீங்காக அமைகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

2003 இந்திய புகையிலை சட்டத்தின் படி இது ஒரு குற்ற செயலாகும். முதல் முறை குற்றம் செய்ப்பவர்களுக்கு 2 ஆண்டு சிறையும் மீண்டும் குற்றம் செய்ப்பவருக்கு 5 ஆண்டு சிறையும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக பசுமை தாயகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லியோ படத்தின் நா ரெடி பாடலில் விஜய்யுடன் இணைந்த அசல் கோளாறு! அதிர்ச்சி அப்டேட்!

முன்னதாக விஜய் நடித்த துப்பாக்கி, சர்கார் படங்களிலும் இது போன்ற காட்சிகள் வெளியிடப்பட்டு பின்னர் பசுமை தாயகம் அளித்த புகாரின் பேரில் நீக்கபட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இது போல சில பிரச்சனைகள் வந்து செல்வது வழக்கம் தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...