ரவை மட்டும் இருந்தால் போதும் 15 நிமிடத்தில் இனிப்பு ரவா கொழுக்கட்டை தயார்!

பொதுவாக கொழுக்கட்டை செய்ய பச்சரிசி மாவு அல்லது இடியாப்ப மாவு என ஏதாவது ஒன்று இருந்தால் மட்டுமே செய்ய முடியும், ஆனால் வீட்டில் எளிமையாக ரவை வைத்து புதிய முறையில் இந்த கொழுக்கட்டை செய்து விடலாம். இந்த கொழுக்கட்டை செய்வதற்கு 15 நிமிடங்களை போதுமானது. மேலும் ஓரிரு நாட்கள் வரை இந்த கொழுக்கட்டை கெட்டுப் போகாமலும் இருக்கும். வாங்க இந்த கொழுக்கட்டை எப்படி செய்யலாம் என பார்க்கலாம்

தேவையான பொருட்கள்

½ கப் – ரவை
⅓ கப் – வெல்லம்
¼ கப் – துருவிய தேங்காய்
1 டீஸ்பூன் – பாசி பருப்பு
¼ தேக்கரண்டி- ஏலக்காய் தூள்
1 டீஸ்பூன் – நெய்
1 கப் – தண்ணீர்

செய்முறை

முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவி அரை மணி நேரத்திற்கு முன்னதாக ஊற வைக்க வேண்டும். ரவையை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் அதிலிருந்து லேசாக வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் கொடுக்கப்பட்டுள்ள வெள்ளத்தை தண்ணீர் சேர்த்து வேண்டும். அதை நன்றாக வடிகட்டி மீண்டும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து வெள்ளத்தை கொதிக்க விட அதில் துருவிய தேங்காய் முன்னதாக ஊறவைத்த பாசிப்பருப்பு இவற்றை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

நன்கு கொதிக்கும் நிலையில் நாம் ரவையை மெதுவாக அந்த வெள்ளம் கொதிக்கும் தண்ணீரில் சேர்க்க வேண்டும். ரவையை சிறிது சிறிதாக தண்ணீரில் சேர்க்க வேண்டும் இல்லை என்றால் ரவை கட்டிப் பிடித்து விடும்.

ரவையை சேர்த்த பின் அதில் ஏலக்காய் தூவ வேண்டும். இப்பொழுது அந்த தேங்காய், பாசிப்பருப்பு, ரவை இவை மூன்றையும் ஒன்றாக சேரும் வரை விடாமல் தொடர்ந்து பத்து நிமிடங்கள் கிளறி கொடுக்க வேண்டும். மிதமான தீயில் இரண்டு முதல் மூன்று நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். அதன் பின் அடுப்பை அணைத்து விடலாம். அதன் பின் அதை ஒரு ஓரமாக வைத்து சிறிது நேரம் ஆறவிட வேண்டும்.

விநாயகர் சதுர்த்திக்கு நம்ம வீட்டு குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி சாக்லேட் கொழுக்கட்டை செய்யலாமா?

அடுத்ததாக கொழுக்கட்டை அச்சை எடுத்து அதன் உள்பக்கமாக நெய் தடவி கொள்ள வேண்டும். நாம் தயார் செய்து வைத்திருக்கும் அந்த மாவை அதனினுள் வைத்து அச்சு பிடிக்க வேண்டும். இப்படி அனைத்து மாவையும் கொழுக்கட்டை அச்சில் சேர்த்து உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் இட்லி அவிக்கும் பாத்திரத்தில் மாற்றி ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். இப்போது நமக்கு சுவையான ரவை கொழுக்கட்டை தயார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews