இனிப்பு பிடிக்காதவர்களுக்கு காரசாரமான உப்பு கொழுக்கட்டை ரெசிபி!

பொதுவாக இனிப்பு பிடிக்காதவர்களுக்கு இந்த காரமான உப்பு கொழுக்கட்டை சுவையானதாக அமையும். மேலும் இதை நாம் காலை, மாலை உணவாகவும் மாற்றிக் கொள்ளலாம். சத்து நிறைந்த எளிமையாக செய்யக்கூடிய இந்த கொழுக் கட்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

அரிசி மாவு – 2 முதல் 3 கப்

எண்ணெய் – 1 டீஸ்பூன்

கடுகு – 1/4 டீஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

பாசி பருப்பு – 1 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் – 1 அல்லது 2

கறிவேப்பிலை – சிறிதளவு

முந்திரி – 6 முதல் 8

துருவிய தேங்காய் – 1 கப்

உப்பு – தேவியான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு கனமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். அதில் சிறிதளவு உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் நன்கு சூடாகி கொதி நிலைக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

அதன்பின் அந்த சூடான தண்ணீரில் நாம் வைத்திருக்கும் அரிசி மாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மேலும் மாவு கட்டி விடாமல் பொறுமையாக கலந்து கொள்ளும் போது கொழுக்கட்டை சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

நாம் இப்பொழுது தயார் செய்து வைத்திருக்கும் அரிசி மாவை ஒரு ஓரமாக தனிமைப்படுத்தி வைக்க வேண்டும்.

அடுத்ததாக ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கவும். அதில் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, பாசி பருப்பு, கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய், முந்திரி என அனைத்தையும் சேர்த்து வறுக்கவும்.

இந்த மசாலா கலவையை அரிசி மாவில் சேர்க்கவும்.அதில் துருவிய தேங்காயை சேர்க்கவும். தேங்காயை வறுத்து சேர்த்துக் கொண்டால் சுவை மேலும் கூடுதலாக இருக்கும் மற்றும் கொழுக்கட்டையும் அடுத்து இரண்டு நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.

இறுதியாக மாவை ஒரு சிறிய உருண்டை எடுத்து கொழுக்கட்டை வடிவத்திற்கு மெதுவாக அழுத்தவும்.

ரவை மட்டும் இருந்தால் போதும் 15 நிமிடத்தில் இனிப்பு ரவா கொழுக்கட்டை தயார்!

பின்பு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் வைக்கவும். கொழுக்கட்டை ஆவியில் 10 முதல் 12 நிமிடங்கள் வரை சமைக்கவும்.

இப்போது ஆரோக்கியமான சுவையான காரா கொழுக்கட்டை தயார். உங்களுக்கு விருப்பமான சட்னி உடன் சூடாக சாப்பிடலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews