யோகிபாபுக்கு தல தோனி கொடுத்த ஐபிஎல் வாய்ப்பு.. ஒரு நொடி அதிர்ந்து போன அரங்கம்!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் தான் யோகிபாபு. இவர் ரஜினி, விஜய், அஜித், கார்த்தி என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போழுது தமிழை தொடர்ந்து இந்தியில் அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஷாருக்கான் படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் காமெடியனாக மட்டுமில்லாமல் குணச்சித்திர நடிகராகவும் பலப் படங்களில் கலக்கி வருகிறார். மேலும் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அதை தொடர்ந்தும் யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படத்தை அறிமுக இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். இந்தப் படம் 2 தேசிய விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் அடையாளமான சுருட்டை முடியின் மூலம் பல கேலி கிண்டல்களுக்கு ஆளானாலும் தனது திறமையால் முன்னேறி பிரபலடைந்து, தற்பொழுது சினிமா துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது யோகிபாபு பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தல தோனி தயாரிப்பில் வெளியாகும் முதல் படமான எல்.ஜி.எம் படத்தில் யோகிபாபு நடித்து வருகிறார்.

ரமேஸ் தமிழ் மணி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகை நதியா, ஹரிஷ் கல்யாண், லவ்டூடே நாயகி இவானா, யோகிபாபு ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அந்த நிகழ்ச்சியில் தல தோனி அவர்கள் யோகிபாபு குறித்து கூறிய அந்த விஷயம் தற்போழுது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து உருவாக இருக்கும் எந்திரன் 3 அப்டேட் இதோ!

யோகி பாபு கிரிக்கெட் வெறித்தனமாக விளையாடுவார் என பலருக்கும் தெரிந்த தகவல் தான். படப்பிடிப்பின் இடைவேளை நேரத்திலும் அங்கு உள்ளவர்களை சேர்த்து கொண்டு யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வெளியாகி வைரலாவதும் உண்டு.

இந்நிலையில் எல்.ஜி.எம் ஆடியோ வெளியிட்டு விழாவில் தல தோனி , இறுதியாக நடந்த ஐபில் போட்டியில் ராயுடு தான் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வைத்தார். ஆனால் அவர் தற்போழுது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அதனால் ராயுடு இடம் காலியாக உள்ளது. அதை நீங்கள் நிரப்பலாம் என தோனி அவர்கள் யோகிபாபுவை பார்த்து கூறியதில் அரங்கமே ஒரு நிமிடம் அதிர்ந்து போனது.

தோனி கூறியது விளையாட்டுத்தனமாக இருந்தாலும் யோகிபாபு வெறித்தனமான கிரிக்கெட் பிளேயர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...