எம்ஜிஆர் – ஜெமினி கணேசன் இணைந்து நடித்த ஒரே படம்.. அதன்பின் இணையாதது ஏன்?

காதல் மன்னன் என்று அழைக்கப்பட்ட ஜெமினி கணேசன், தனி ஹீரோவாக பல படங்களில் நடித்திருந்தாலும் சிவாஜிகணேசன் நடித்த பல படங்களில் இரண்டாம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஆனால் எம்ஜிஆர் உடன் அவர் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். அந்த படம் தான் ‘முகராசி’.

கடந்த 1966ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘முகராசி’. தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ஜெயலலிதா, ஜெயந்தி உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஏவிஎம் நிறுவனத்திற்காக பட ரிலீஸை தள்ளி வைத்த எம்ஜிஆர்.. ஆனால் 20 நாட்களில் ரிலீஸ் செய்ததால் சிக்கல்..!

இந்த படத்தின் கதை என்னவெனில் சோமு, ராமு ஆகிய இரண்டு சிறுவர்களின் அன்னையை வில்லன் கொன்றுவிடுவார். இதில் சோமு தனது அன்னையை கொன்றவரை பழிவாங்க வேண்டும் என்று வெறியுடன் இருப்பார். ஆனால் ராமு தாயாரை கொன்றவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று நினைப்பார்.

ஜெமினி கணேசன் சோமு என்ற கேரக்டரிலும், எம்ஜிஆர் ராமு என்ற கேரக்டரிலும் நடித்திருந்தினர். இந்த படம் உருவாகும்போது அண்ணனாக நடித்த ஜெமினி கணேசன் வயது 46. தம்பியாக நடித்த எம்ஜிஆரின் வயது 49.

muharasi

எம்ஜிஆர் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். ஜெமினி தனது தாயாரை கொன்றவரை பழிவாங்க துடிக்கும்நிலையில், எம்ஜிஆர் அந்த வில்லனை சட்டத்தின் முன் நிறுத்த முயற்சி செய்வார், இறுதியில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது தான் கிளைமாக்ஸ்.

எம்.ஜி.ஆர்க்கு ஜோடியாக ஜெயலலிதா இந்த படத்தில் நடித்தார். ஆனால் அவரது தந்தைதான் தனது தாயாரை கொன்ற வில்லன் எம்.என்.நம்பியார் என்ற செய்தி எம்ஜிஆருக்கு தெரிந்ததும், அவர் அடையும் அதிர்ச்சி, அதன் பின் அவர் எடுக்கும் முடிவு கதையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும்.

எம்ஜிஆர் அறிமுகமான படத்தில் அறிமுகம்.. 1000 படங்களுக்கும் மேல் நடித்த தங்கவேலுவின் கதை..!

இந்த படத்தில் எந்தெந்த கேரக்டரில் யார் யார் நடிக்கலாம் என தேவர் பிலிம்ஸ் ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது, எம்ஜிஆரின் அண்ணன் கேரக்டரில் நடிக்க பாலாஜி, அசோகன், எம்.ஜி.சக்கரபாணி ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர்.

muharasi1

ஆனால் ஜெமினி கணேசனை நடிக்க வையுங்கள், அவர் நடித்தால் இந்த கேரக்டருக்கு சரியாக இருக்கும் என்று எம்ஜிஆர் தெரிவித்தார். எம்ஜிஆர் விருப்பப்பட்டதாக ஜெமினி கணேசனிடம் இந்த தகவலை தேவர் பிலிம்ஸ் நிர்வாகத்தினர் கூறியபோது, எம்ஜிஆர் தன்னை தேர்வு செய்தார் என்று தெரிந்தவுடன் எந்தவித மறுப்பும் சொல்லாமல் இந்த படத்தில் அவர் நடித்து கொடுத்தார்.

இந்த படத்தை 18 நாட்களில் எடுத்து முடித்து இயக்குனர் எம்.ஏ.திருமுகம் சாதனை செய்தார். இந்த படம் 100 நாட்களை தாண்டி ஓடி நல்ல வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். ஆனாலும் இந்த படத்தின் பாடல்கள் பெரிய அளவில் பிரபலமாகவில்லை.

ஒரே டைட்டில், ஒரே கதை.. ஒரே நாளில் தனித்தனியாக விளம்பரம் கொடுத்த எம்ஜிஆர் – சிவாஜி..!

18 நாட்களில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் நல்ல வசூலை பெற்றுக் கொடுத்து, தேவர் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நல்ல லாபத்தையும் பெற்றுக் கொடுத்தது. இந்த படத்திற்கு பின்னர் ஜெமினி கணேசன் அதிக அளவில் தனி ஹீரோவாக நடித்ததால்தான் எம்ஜிஆர் உடன் அவர் மீண்டும் இணைந்து நடிக்கவில்லை என்று கூறப்பட்டது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...