60 வருடத்திற்கு முன் தங்கப்பதுமை படத்திற்காக நடிகர் திலகம் சிவாஜி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

1959 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தங்கப்பதுமை. இந்த படத்தில் சிவாஜி உடன் இணைந்து நடிகை பத்மினி கதாநாயகியாக நடித்திருப்பார். இந்த படத்திற்கு நடிகர் திலகம் சிவாஜி வாங்கிய சம்பளம் குறித்த தகவலை பார்ப்பதற்கு முன்னதாக இந்த படம் உருவான கதை குறித்து சுவாரஸ்யமான தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1942 ல் ஜூபிடர் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் கண்ணகி எனும் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டது. இந்த தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த எம் சோமசுந்தரம் மற்றும் எஸ் கே மொகைதீன் என இருவரும் மிகச் சிறந்த கலை ரசிகர்களாக இருந்தனர். இந்த காரணத்தினால் சிறப்பான திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என விரும்பி உள்ளனர். அந்த வகையில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை படமாக எடுக்கலாம் என முடிவெடுத்து அதற்கு திரைக்கதை எழுதும் பொறுப்பை இளங்கோவன் என்பவரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்பின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நடந்து படம் திரையிடப்பட்டது.

இந்த படத்தில் பி யு சின்னப்பா கோவலனாகவும், கண்ணாம்பாள் கண்ணகியாகவும், எம் எஸ் சரோஜா மாதவியாகவும் நடித்திருப்பார். இந்த படத்தை ஒரு கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர். படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து இந்த படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்ற ஆசை தயாரிப்பாளர் இருவருக்கும் வந்துள்ளது. அந்த நேரத்தில் ஹாலிவுட் திரைப்படமான தி எகிப்து என்னும் திரைப்படம் வெளியாகி மிகவும் பிரபலம் அடைந்திருந்தது. இந்தப் படத்தின் கதையின் மூலம் கிடைத்த சில அனுபவங்களை வைத்து ராமநாதனும், ஏ எஸ் சாமியும் இணைந்து தங்கப்பதுமை எனும் கதையை உருவாக்கி வைத்திருந்தனர்.

தங்கப்பதுமை படத்தின் கதையும் தயாரிப்பாளர்கள் மனதில் வைத்திருந்த கண்ணகி படத்தின் ரீமேக் கதையும் சில இடங்களில் ஒத்துப் போகும் விதத்தில் அமைந்திருந்தது. அதன்பின் தயாரிப்பாளர்கள் கண்ணகி படத்தின் ரீமேக்காக தங்கப்பதுமை படத்தை எடுக்க முடிவெடுத்துள்ளனர். அதன்பின் இந்த திரைப்படம் படமாக எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் கோவலனாக சிவாஜியும், கண்ணகியாக நடிகை பத்மினியும் நடித்திருப்பார். கண்ணகி திரைப்படத்தில் உள்ள மாதவி கதாபாத்திரத்திற்காக தங்கப்பதுமை திரைப்படத்தில் மாயமோகினி எனும் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த கதாபாத்திரம் ஆண்களை மயக்கக்கூடிய ஒரு வசீகர மோகினியாக நடிக்க வேண்டும்.

மக்கள் திலகம் எம்ஜிஆர் முகம் சுளிக்க வைத்த கவிஞர் வாலி! படப்பிடிப்பில் நடந்த கலவரம்!

இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முதலில் அஞ்சலி தேவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவர் அந்த படத்தில் நடிக்க மறுத்துள்ளார். அதன் பிறகு நடிகை பானுமதியுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. அதன் பின் நடிகை டி ஆர் ராஜகுமாரி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இவ்வளவு போராட்டங்களுக்கு அடுத்தபடியாக தங்கப்பதுமை திரைப்படம் படமாக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியும் அடைந்தது.

இந்தத் திரைப்படம் அந்த காலத்தில் கிட்டத்தட்ட எட்டு லட்ச ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்தில் நடித்த சிவாஜிக்கு 60 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டிருந்தது. மேலும் படத்தில் அவருக்கு இணையாக நடிகை பத்மினி நடித்திருந்ததால் அவருக்கும் 60,000 சம்பளமாக வழங்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து மாயமோகினி கதாபாத்திரத்தில் நடித்த டி ஆர் ராஜகுமாரி அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.