ராகதேவன்னா சும்மாவா..சவாலான ராகங்களில் கெத்து காட்டிய இளையராஜா..! மேஸ்ட்ரோ செய்த மேஜிக்..

தற்போது தமிழ் சினிமாவின் ஹாட் செய்தியாக இருப்பது இளையராஜா-வைரமுத்து கருத்துமோதல் தான். இளையராஜா தான் இசையமைத்த பாடல்கள் எனக்கே என்று உரிமை கொண்டாட, அதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு சாரரும், ஆதரவாக சிலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். வைரமுத்துவோ மொழியா இசையா என்ற தொணியில் பேசி கங்கை அமரனிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். இப்படி இந்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க அப்படி என்னதான் இளையராஜா மேஜிக் செய்திருக்கிறார் என்று பார்ப்போமா?

1200க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்த இளையராஜா கிட்டத்தட்ட 5000 பாடல்களைக் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமன்றி அத்தனைக்கும் பின்னனி இசை. இதுவே ஒரு பிரம்மாண்டம் தான். கர்நாடக சங்கீதத்தின் பழமையான ராகமான ஸ்ரீ ராகத்தில் இசைஞானி இசையமைத்த ஒரே பாடல் “சோளம் வெதக்கையிலே சொல்லிபுட்டு போனபுள்ள…” என்ற 16 வயதினிலே படத்தில் வரும் டைட்டில் பாடல் இசைஞானியின் குரலில் ஒலித்தது.

மழையைப் பொழிவிக்கும் ராகமான அமிர்தவர்ஷினி ராகத்தில் ஒரு பாடலை ரெக்கார்டிங் செய்துவிட்டு வெளியே வருகையில் உண்மையாகவே மழை பொழிந்ததாம். உடனிருந்தவர்களுக்கு ஒரே இன்ப அதிர்ச்சி உண்டானது. கர்நாடக சங்கீத மேதையான பாலமுரளி கிருஷ்ணாவின் குரலில் ஒலித்த கவிக்குயில் படப் பாடலான “சின்னக் கண்ணன் அழைக்கிறான்..” பாடலில் பயன்படுத்தப்பட்ட ரீதி கொள்ளை ராகத்தினை இதுவரை யாரும் பயன்படுத்தியதே கிடையாதாம்.

முதல்ல 1000, அடுத்து 6,000 ஆனா இப்போ.. மளமளவென எகிறிய கவின் சம்பளம்.. வாயடைத்துப் போன சக நடிகர்கள்..

மேலும் தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக எலக்ட்ரிக் பியானோவில் காயத்திரி என்ற படத்தில் வாழ்வே மாயமோ.. வெறுங்கதையா என்ற பாடல் இசைக்கப்பட்டது. மேலும் கிரியேட்டிவ்-ன் உச்சம் தொட்ட பாடலான ‘சிட்டுக்குருவி’ படத்தில் இடம்பெறும் என் கண்மணி என் காதலி.. இளம்மாங்கனி பாடல் Counter Point முறையில் இசைக்கப்பட்டது. அடுத்ததாக ஞானி செஞ்சுருட்டி ராகத்தில் உருவாக்கிய ஒரே பாடல் மலேசியா வாசுதேவனை ஹிட் ஆக்கிய ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடல் இசைஞானியின் திறமைக்கு தீனி போட்ட பாடலாகும்.

ரஜினியின் எவர்கிரீன் பாடலான “ராமே ஆண்டாலும்.. ராவணன் ஆண்டாலும் பாடல் அந்தோலிகா ராகத்தில் உருவாக்கி அசரவைத்தார் இசைஞானி. தமிழ் சினிமா வரலாற்றில் ஸ்டீரியோ இசையில் வெளிவந்த முதல் சினிமா உங்கள் அனைவருக்கும் தெரிந்த பிரியா படப் பாடல்கள் தான். மேலும் ராக்கம்மா கையைத் தட்டு பாடல் உலக அளவில் பிரசித்தி பெற்ற பாடலாக விளங்கி வருகிறது. அதுமட்டுமன்றி தளபதியில் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலுக்கு சுமார் 137 இசைக் கருவிகளை இசைத்து அந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார் இளையராஜா.

மேலும் திருவாசகத்தை சிம்பொனியில் இசைத்து உருக வைத்தது என இசை உலகின் அரசனாய் விளங்குகிறார் இளையராஜா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...