தங்கலான் தங்கத்துக்கு அடித்த ஜாக்பாட்!.. அடுத்து பாலிவுட்டில் அந்த நடிகருக்கு ஜோடியா நடிக்கப் போறாரா?

மலையாளத் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரான கே.யு. மோகனின் மகளான மாளவிகா மோகனன் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

அந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் செம க்யூட்டாக நடித்திருந்தார். அந்தக் கண்ணை பார்த்தாக்கா லவ்வு தானா தோணாத என அனிருத் இசையில் யுவன் சங்கர் ராஜா பாடிய பாடல் இன்னமும் ரசிகர்கள் மனதில் மாளவிகா மோகனனுக்கு தனி இடத்தை பெற்றுத் தந்துள்ளது.

அனிமல் 2 படத்தில் மாளவிகா மோகனன்

அடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாறன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஓடிடியில் அந்த படம் வெளியாகி ஓடாமல் போய்விட்டது.

அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள தங்கலான் படத்தை ரொம்பவே எதிர்பார்த்த காத்திருக்கிறார் மாளவிகா மோகனன். இந்நிலையில், அடித்தது ஜாக்பாட் என்பது போல அடுத்ததாக ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாக உள்ள அனிமல் 2 படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போகிறார் என்கிற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தங்கலானுக்கு பிறகு அடித்த ஜாக்பாட்

டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான அனிமல் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கீதாஞ்சலி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முத்தக்காட்சிகள், படுக்கை அறை காட்சிகள் என படு கவர்ச்சியாக ராஷ்மிகா நடித்த நிலையில், அடுத்த பாகத்தில் கிளாமர் குயின் மாளவிகா மோகனை களமிறக்க சந்தீப் ரெட்டி வங்கா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிய ஆகாதது குறிப்பிடத்தக்கது.

அனிமல் படத்தை விட அனிமல் 2 படத்தில் அதிக ஆபாச காட்சிகள் இடம்பெறுமா என்றும் முதல் பாகத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் பாகத்தில் நடிக்க மாளவிகா மோகனன் சம்மதிப்பாரா என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ரன்பீர் கபூர், பாபி தியோல், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்த அனிமல் திரைப்படம் இதுவரை 711 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், பெரிய சம்பளம் பெரிய படம் என்றால் எந்த ஹீரோயின் தான் மறுப்பார்கள் என்றும் கருத்துக்கள் வெளியாகி உள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.