திகட்டாத திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி சாப்பிட்டு இருக்கீங்களா? அதை வீட்டிலயே பண்ண முடியுமா!

திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி பற்றி கேள்விப்படாதவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இல்லை என்று கூறும் அளவிற்கு அதனுடைய சுவை ரசிக்க வைக்கிறது. பிரியாணி வகைகள் இந்தியா முழுவதும் பல்வேறு சுவைகள் தயாரிக்கப்படுகிறது. அதில் தலப்பாகட்டி பிரியாணி மிகவும் பிரபலமான வகைகளில் ஒன்றாகும்.

thalappakatti style chicken biriyani 1

தேவையான பொருட்கள்:-

சீரக சம்பா அரிசி – 2 கப்
நாட்டு கோழி – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 2 கப் (சுமார் 200 கிராம்)
தக்காளி – 1 (நறுக்கியது)
பூண்டு – 15 பல்
இஞ்சி – தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் – 4
புதினா இலைகள் – 1/2 கப்
கொத்தமல்லி – 1/2 கப் (நறுக்கியது)
தயிர் – 1/4 கப்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 1/4 கப்
நெய் – 3 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
இலவங்கப்பட்டை – 1 துண்டு
கிராம்பு – 3
ஏலக்காய் – 3
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

கோவில் தயிர்சாதம் சுவையின் ரகசியம்! இப்படியும் கூட தயிர் சாதம் செய்யலாமா!

செய்முறை:-

முதலில் கோழி துண்டுகளை கழுவி, எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஊற வைக்கவும். இதை அரை மணி நேரம் ஊற விடவும். அரிசியைக் கழுவி, தேவையான அளவு தண்ணீரில் சுமார் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். தண்ணீரை முழுவதுமாக வடிகட்டவும். வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, புதினா இலைகள், கொத்தமல்லி தழை – காய்கறிகளை கழுவி, நறுக்கி தயார் செய்யவும். வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை மிக்ஸியில் எடுத்து பொடியாக அரைக்கவும். ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை சூடாக்கி, பின்னர் அரைக்க பட்ட மசாலாவை சேர்க்கவும். சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.பின்னர், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.அடுத்து புதினா இலைகள் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கவும்.இதனுடன் தயிரையும் சேர்க்கவும்.எல்லாவற்றையும் ஒன்றாக 5 நிமிடங்கள் வறுக்கவும்.அடுத்து நீரின் சரியான அளவைச் சேர்க்கவும். சீரக சம்பா அரிசிக்கு 1 கப் அரிசிக்கு 1.5 கப் தண்ணீர் தேவை. இப்போது ஊறவைத்த சீரக சம்பா அரிசியைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும். கொதித்ததும் மூடி மிதமான சூட்டில் 15 நிமிடம் வேகவிடவும். பின்னர் அதை திறந்து மேலே ஒரு டீஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி சுவையாக ரசித்து சாப்பிடுங்கள்.

டயட் இருப்பவர்களா.. கொள்ளு ரசம் ட்ரை பண்ணி பாருங்க..

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.